பக்கம் எண் :

108தொல்காப்பியம் - உரைவளம்

காய்சின வேந்தன் பாசறை நீடி
நந்நோ யறியா வறனி லாள
ரிந்நிலை களைய வருகுவர் கொல்லென
வானா தெறிதரும் வாடையொடு
நோனேன் றோழியென் றனிமை யானே.”

(அகம்-294)
  

இது பருவ வரவின் கண் வற்புறுத்துந் தோழிக்குத்தலைவி கூறியது.
  

இம் மணிமிடை பவளத்து முல்லையுள் முன்பனி வந்தது நிலமுங் கருவும் மயங்கிற்று.5
  

“கருங்கால் வேங்கை வீயுகு துறுக
லிரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
யெல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.”
6

(குறுந்-47)
  

இஃது இரா வந்து ஒழுகுங்காலை முன்னிலைப் புறமொழியாக நிலாவிற்கு உரைப்பாளாய் உரைத்தது.
  

இக் குறுந்தொகையுட் குறிஞ்சியுள் வேனில் வந்தது.
  

“விருந்தின் மன்ன ரருங்கலந் தெறுப்ப”

(அகம்-54)


5. பாசறை  நீடி  நம்நோய்  அறியா   அறினிலாளர்   வருவர்   கொல்  என  நோகேன்  என்பது
உரிப்பொருள் முல்லைக்குரியது குறிஞ்சிக்குரிய  முன்பனி (அற்சிரம்) வந்தது பொழுதுமயக்கம். வயல்
என மருதநிலமும் நெல் என அதன் கருப்பொருளும் இச்செய்யுளில் வந்தன மயக்கம்.
  

6. இரவுக்குறிவிலக்கலால்   உரிப்பொருளாலும்    வேங்கைக்    கருப்பொருளாலும்    துறுகல்   காடு
என்பனவற்றால்  நில  முதற்பொருளாலும்  இப்பாட்டு குறிஞ்சியாயிற்று.  நெடுவெண் நிலவாக விளக்க
முறுதல் வேனிற் காலத்தாதலின் வேனிற்பொழுது மயங்கியதாகக் கொள்க.