என்பது கார்காலத்து மீள்கின்றான் முகிழ் நிலாத் திகழ்தற்குச் சிறந்த வேனிலிறுதிக்கண் தலைவிமாட்டு நிகழ்வன கூறி, அவை காண்டற்குக் கடிது தேரைச் செலுத்தென்றது. |
இது முல்லைக்கண் வேனில் வந்தது. |
“துஞ்சுவது போல விருளி விண்பக விமைப்பது போல மின்னி யுறைக்கொண் டேறுவது போலப் பாடுசிறந் துரைஇ நிலநெஞ் சுட்க வோவாது சிலைத்தாங் கார்தளி பொழிந்த வார்பெயற் கடைநா ளீன்றுநா ளுலந்த வாலா வெண்மழை வான்றோ யுயர்வரை யாரும் வைகறைப் புதலே ரணிந்த காண்பின காலைத் தண்ணறும் படுநீர் மாந்திப் பதவருந்து வெண்புறக் கொடைய திரிமருப் பிரலை வார்மண லொருசிறைப் பிடவவிழ் கொழுநிழற் காமர் துணையோ டமர்துயில் வதிய வரக்குநிற வுருவி னீயன் மூதாய் பரப்பிய வைபோற் பாஅய்ப் பலவுட னீர்வார் மருங்கி னீரணி திகழ வின்னும் வாரா ராயி னன்னுதல் யாதுகொன் மற்றவர் நிலையே காதலர் கருவிக் காரிடி யிரீஇய பருவ மன்றவர் வருதுமென் றதுவே.”7 |
(அகம்-139) |
இது பிரிவிடை யாற்றாது தோழிக்கு உரைத்தது. |
இம் மணிமிடை பவளத்து பாலைக்கண் முன்பனியும் வைகறையும் ஒருங்கு வந்தன. |
7. இன்னும் வாராராயின் யாது சொல் மற்றவர் நிலையே என்றது பாலை உரிப்பொருள் கார்பெயற் கடை நாள் என்றது குறிஞ்சிக்குரிய முன்பனிப்பொழுது. வைகறை என்ற மருதச் சிறுபொழுதும் வந்தது காண்க. |