“தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலி னல்லாந்தா ரலவுற வீன்றவள் கிடக்கைபோற் பல்பய முதலிய பசுமைதீ ரகன்ஞாலம் புல்லிய புனிறொரீஇப் புதுநல மேர்தர வளையவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள விளையவ னரம்பாபோ லெக்கர்போழ்ந் தறல்வார மாவீன்ற தளிர் மிசை மாயவ டிதலைபோ லாயிதழ்ப் பன்மல ரைய கொங் குறைத்தர மேதக விளவேனி லிறுத்தந்த பொழுதின்கண்” |
|
“சேயார்கட் சென்றாவென் னெஞ்சினைச் சின்மொழி நீ கூறும் வரைத்தன்றி நிறுப்பென்மன் னிறைநீவி வாய்விரிபு பனியேற்ற விரபுப்பன் மலர் தீண்டி நோய்சேர்ந்த வைகலான் வாடைவந் தலைத்தரூஉம்” |
|
“போழ்துள்ளார் துறந்தார்கட் புரிவாடுங் கொள்கையைச் சூல் பாங்கே சுடரிழாய் கரம்பென்மற் கைநீவி வீழ்கதிர் விடுத்த பூ விருந்துண்ணு மிருந்தும்பி யாழ்கொண்ட விமிழிசை யியன்மாலை யலைத்தரூஉம்” |
|
“தொடிநிலை நெகிழ்த்தார்கட் டோயுமென் னாருயிர் வடுநீங்கு கிளவியாய் வலிப்பென்மன் வலிப்பவு நெடுநிலாத் திறந்துண்ண நிரையதழ் வாய்விட்ட கடிமலர் கமழ்நாற்றங் கங்குல்வத் தலைத்தரூஉம்” எனவாங்கு, |
|
“வருந்தினை வதிந்தநின் வளைநீங்கச் சேய்நாட்டுப் பிரிந்துசெய் பொருட்பிணி பின்னோக்கா தெய்தி நம் மருந்துயர் களைஞர் வந்தனர் திருந்தெறி றிலங்குநின் றே மொழி படர்ந்தே.”8 |
(கலி-29) |
8. இளவேனில் இறுத்தந்த பொழுது பாலைக்குரிய பொழுது. வாடைவந்து அலைத்தரும் என்றது குறிஞ்சிக்குரிய கூதிர்ப் பொழுது மாலை அலைத்தரும் என்றது முல்லைச்சிறு பொழுது கங்குல்லந்தலைத்தரும் என்றது குறிஞ்சிச்சிறுபொழுது. |