பக்கம் எண் :

112தொல்காப்பியம் - உரைவளம்

பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழ
லினிவரி னுயருமற் பழியெனக் கலங்கிய
தனியவ ரிடும்பைகண் டினைதிவோ வெம்போல
வினிய செய் தகன்றாரை யுடையை யோநீ”

(கலி-129)
  

என  நெய்தற்  கலியுட்  கங்குலும்  மாலையும்  முன்பனியும்  வந்தன.11  ஒழிந்தனவும்  மயங்குமாறு
வந்துழிக் காண்க
  

பாரதியார்
  

14. திணைமயக். . . . . . புலமையோரே
  

கருத்து :- இதுவும்  இதையடுத்த   ‘உரிப்பொருளல்லன’   என்றுஞ்   சூத்திரமும்   முன்  ஐந்தாவது
சூத்திரத்திற்   கூறியமுல்லை   முதலிய   நிலவகைகளுக்கும்,  பின்  ‘புணர்தல்  பிரிதல்’  எனும்  14-வது
சூத்திரத்திற்  கூறும்  குறிஞ்சி   முதலிய   திணைவகைகளுக்கும்   உள்ள  இயைபு முரண்களை, நடுநிலை
விளக்காய் நின்று, எடுத்துக்காட்டி ஐயமகற்ற எழுந்த சூத்திரங்களாகும்.
  

பொருள் :-  தினை  மயக்குறுதலுங்  கடிநிலையிலவே   குறிஞ்சி  முதலிய  அன்பினைந்திணைகளான
புணர்தல்,    பிரிதல்,   இருத்தல்,    இரங்கல்,   ஊடல்   என்ற    ஐந்தொழுக்கங்களும்    தத்தமக்குச்
சிறப்புரிமையுடைய முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் நிலங்களில் நிகழ்வதுடன் 
அவ்வாறு சிறப்புரிமையற்ற பிற நிலங்களில் வந்து கலத்தலும் நிகழ்வதுடன்  அவ்வாறு சிறப்புரிமையற்ற பிற
நிலங்களில்  வந்து   கலத்தலும்   விலக்கப்படா;   நிலனொருங்கு    மயங்குதல்   இன்றென  மொழிப -
(இவ்வாறொழுக்கங்கள் தமக்குரிமையற்ற  நிலங்களில்  நிகழ்ந்து  மயங்குதலமையுமெனினும்)  அவ்வொழுக்க
மயக்கம்   பற்றித்   தம்முள்   நிலங்கள்    மயங்குதலில்லையென்று    கூறுவர்;  புலன்   நன்குணர்ந்த
புலமையோரே-புலனெறி வழக்கங்களை நன்கறிந்த அறிவுடையோர்.


11. இப்பாடல் இரங்குதல் உரிப்பொருளால் நெய்தல்.  இருள்தலைவர   என்பதனால்  கங்குலும்  மருள்
மாலை  என்பதனால்  முல்லைச்  சிறுபொழுதும் பனியிருள்  என்பதனால் குறிஞ்சிக்குரிய முன்பனிப்
பொழுதும் வந்தமை காண்க.