குறிப்பு :- இதன் முதல் மூன்றாமடிகளின் ஈற்றேகாரங்கள் அசைநிலை. உம்மை திணைக்கும் மயக்கம் சிறப்பின்மை உணர்த்தும் இதனால் எவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு திணை சிறப்புரிமை யுடையதென்பதும் அவ்வுரிமை முறையன்றி நிலங்களுள் திணைகளும் தம்முள் மயங்குதல் சிறவாதெனினும் விலக்கு மாறில்லை என்பதும் தெளியப்படும். மயக்கம், தனக்குச் சிறப்புரிமையற்ற நிலத்தில்பிற ஒழுக்க நிகழ்ச்சி குறிக்கும். எந்நிலத்தும் திணைகள் தம்முட்டா மயங்குதல்! கூடாமையின் அது கருத்தன்மை தேற்றம் ஒருங்கு, உடனிகழ்ச்சிப் பொருட்டு. |
அகத்துறைகளில் முதலில் ஒழுக்கங்களுக்கே உரிய குறிஞ்சி முதலியபெயர்கள் பின்நிரலே அவ்வொழுக்கங்களுக்குச் சிறந்துரிய நிலங்களுக்கும் ஆகுபெயராய் வழங்கலாயின. அவைகள் நிலங்களுக்கே உரிய பெயர்களெனல் பிற்காலப் பிறழ்வுணர்ச்சி. எனவே, சிறப்புக் குறியாகப் புணர்தல் முதலிய ஐந்திணைகளையும், ஆகுபெயராய் அவற்றிற்குச் சிறந்துரிய நிலங்களையும் குறிஞ்சி, பாலை, நெய்தல், மருதம் எனும் பொதுப் பெயர்களாற் கூறுதல் பழைய தமிழ் நூன் மரபு. எனில், பெயரொற்றுமையால் திணைகளும் நிலங்களும் யாண்டும் ஒரு நீர்மைய வெனக் கொண்டு, திணை மயங்குந்தோறும் நிலமயக்கமும் உண்டெனக் கொள்ளுதல் கூடாதென வற்புறுத்தி ஐயமகற்றுவதே ஈண்டிச் சூத்திரக் கருத்தாகும். திணையென்பது ஒழுக்கத்திற்கே சிறந்துரிய பெயராகும். ‘திணைக்குரிப் பொருளே’ என்னுஞ் சொற்றொடரும் இதனை வலியுறுத்தும். ஒவ்வோரொழுக்கமும் அவ்வதற்குச் சிறப்புரிமை கூறிய ஒரு நிலத்திற்கே தனியுரிமையுடைத்தன்று. ஒவ்வொரு நிலமக்களும் அவ்வந் நிலத்தில் ஐந்திணை யொழுக்கங்களையும் கையாளுதலியல்பு. ஆகவே ஒவ்வொரு நிலத்தும் அதுவதற்குச் சிறந்துரிய ஒழுக்கமேயன்றிப் பிறவொழுக்கங்களையும் தொடர்பு படுத்திப் புலனெறி வழக்கஞ் செய்தல் தவறாகாது. ஒரு நிலத்து நிகழும் ஒழுக்க வேறுபாட்டால் அந்நிலத்தியல்பும் மாறினதாகக் கருதலாகாது. மயங்கி நிகழும் ஒழுக்க வேறுபாட்டால் அந்நிலத்தியல்பும் மாறினதாகக் கருதலாகாது மயங்கி நிகழும் |