இது நிலம்வரையாது வந்த கைக்கிளை. இதனைக் குறிஞ்சியுட் கோத்தார் புணர்ச்சி யெதிர்ப் பாடாகலின். |
“கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே யாய மகள்;” |
“வளியா வறியா வுயிர்காலம் கொண்டு நளிவாய் மருப்பஞ்சு நெஞ்சினார் தோய்தற் கெளியவோ வாயமக டோள்;” |
(கலி-103) |
“அவ்வழி முள்ளெயிற்றேஎ ரிவளைப் பெறுமிதோர் வெள்ளேற் றெருத்தடங்கு வான்;” |
“ஒள்ளிழை, வாறாது கூந்தற் றுயில்பெறும் வைமருப்பிற் காரி கதனஞ்சான் கொள்பவன்..........” |
(கலி-104) |
என்றாற்போல ஏறுதழுவினாற்கு உரியள் இவளென வந்த கைக்கிளைகளெல்லாம் முல்லைக்கலி பலவற்றுள்ளுங் காண்க. |
‘முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே’ (105) என்பதனான் அவை கைக்கிளையாயின. |
இனி ‘எழின் மருப் பெழில்வேழம்’ என்றது முதலிய நாலுபாட்டும் ஏறிய மடற்றிறமான (51) பெருந்திணை; என்னை? |
“மாமேலே னென்று மடல்புனையா நீந்துவேன் தேமொழி மாத ருறாஅ துறீஇய காமக் கடலகப் பட்டு.” |
(கலி-139) |
என்றாற் போல்வன வருதலின். |
‘புரிவுண்ட புணர்ச்சி’ என்றது முதலிய ஆறுபாட்டுந் தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமாகிய (51) பெருந்திணை இவற்றை நெய்தலுட் கோத்தார் சாக்காடு குறித்த இரங்கற் பொருட்டாகலின். கூனுங் குறளும் உறழ்ந்து கூறும் பெருந்திணையும் ஊடற் பகுதியவாகலின் மருதத்துட் கோத்தார். |
“கல்லாப் பொதுவனை நீமாறு.” |
(கலி-112) |
எனப் பொதுவியர் கூறலும். |