“. . . . . . புலிப்பகுவா யேற்றை . . . . . . விடர்முகைக் கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை வாடுபூஞ் சினையிற் கிடக்கும் உயர்வரை நாடனொடு பெயருமாறே” |
(குறுந்-343) |
புலி வேங்கைச் சினையிற் கிடக்கு முயர்வரை நாடாகவே’ நிலம் குறிஞ்சி; நாடனொடு பெயர்தல் கொண்டுதலைக் கழிதலாமுரிப்பொருள். இன்னும் “ஊஉரலரெழ” எனும் பெருங்கடுங்கோவின் பாட்டு மதுவா தலறிக.” |
‘. . . . . . . . . . . . . . . . . . . . . . . உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு விண்டொட நிவதந் விலங்குமலைக் வகாற் கரும்புநடு பாத்தி யன்ன பெருங்கழிற் றடிவழி நிலைஇய நீரே.” |
(குறுந்-262) |
இதில் புணர்தற்குரிய மலையிற்றலைவனுடன் போகும் தலைவி களிற்றடிவழி நிலைஇய நீரைத் தலைவனோடுண்ணுதலை விரும்பும் ஒழுக்கம் மயங்குதலறிக. |
இனி கொண்டுதலைக்கழிதல் |
“அன்னாய் வாழி வேண்டன்னை, நம் படப்பைத் தேன் மயங்கு பாலினும் இனிய, அவர்நாட் டுவலைக் கூவற் கீழ் மானுண் டெஞ்சிய கலுழி நீரே” |
(ஐங்-203) |
எனும்ஐங்குறுநூற்றுப்பாட்டில் குறிஞ்சி நிலத்தும். |
“ஒன்றானு நாம்மொழிய லாமோ செலவதான் பின்றாது பேணும் புகழான்பின்-பின்றா வெலற்கரிதாம் வில்வலான் வேல்விடலை பாங்காச் செலற்கரிதாச் சேய சுரம்.” |
(திணைமாலை 150 செய்-87) |