(இ-ள்) புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் அவற்றின் நிமித்தம் என்று இவை-புணர்தலும், பிரிதலும், இருத்தலும் இரங்கலும், ஊடலும், அவற்றின் நிமித்தமும் என்று சொல்லப்பட்ட இவை, தேரும் காலை திணைக்கு உரிப்பொருள்-ஆராயுங்காலத்து ஐந்திணைக்கும் உரிப்பொருளாம். |