பக்கம் எண் :

128தொல்காப்பியம் - உரைவளம்

பிரிவுக்கு     பாலைக்கு  உரித்தாமாறு   மேற்சொல்லப்பட்டது.  ‘ஏனைய    மொழிந்த   பொருளோ
டொன்றவைத்தல்’ (மரபு-110)  என்னும்  தந்திர  உத்தியால், புணர்தல் என்பது நெய்தற்கும், ஊடல் என்பது
மருதத்திற்கும் பெரும்பான்மையும் உரித்தாகவும்  சிறுபான்மை  எல்லாப்பொருளும்  எல்லாத்  திணைக்கும்
உரித்தாகவும்1     கொள்ளப்படும்.    இருத்தலாவது,   தலைமகன்    வருந்துணையும்   ஆற்றியிருத்தல்.
இரங்கலாவது ஆற்றாமை. நச்சினார்க்கினியம்.
  

16. புணர்தல் பிரித. . . . . . பொருளே.
  

இது   மேனிறுத்த   முறையானன்றியும்   அதிகாரப்பட்டமை2   கண்டு    உரிப்பொருள்  கூறுகின்றது.
உரிப்பொருள் உணர்ந்தல்லது உரிப்பொருளல்லன உணரலாகாமையின்.
  

இதன் பொருள் :- புணர்தலும்     புணர்தனிமித்தமும்,     பிரிதலும்    பிரிதனிமித்தமும்,  ஊடலும்
ஊடனிமித்தமும் என்ற பத்தும் ஆராயுங்காலை ஐந்திணைக்கும்3  உரிப்பொருளாம் என்றவாறு.
  

‘தேருங்காலை’  என்றதனாற் குறிஞ்சிக்குப் புணர்ச்சியும்’ பாலைக்குப் பிரிவும், முல்லைக்கு இருத்தலும்,
நெய்தற்கு  இரங்கலும்,  மருதத்திற்கு  ஊடலும், அவ்வந்நிமித்தங்களும் உரித்தென்று ஆராய்ந்துணர்க.
இக்கருத்தே பற்றி ‘மாயோன் மேய’ (5) என்பதனுள் விரித்துரைத்தவாறுணர்க.4


1. ‘சிறுபான்மை...........................உரித்தாகவும்’   -   இது   உரிப்பொருள்   மயங்காது    என்ற  இவரது
கொள்கைக்கு மாறுபட்டது.
  

2. மேல்  நின்றமுறைமை  -  முதல்கருஉரி.  கருப்பொருள் கூற உரிப்பொருள் கூறாது உரிப்பொருளை
இங்குக் கூறக்காரணம் உரிப்பொருளல்லன மயங்கவும் பெறும் எனமுன் சூத்திரத் தொடர்பு காரணமாம்.
  

3. ஐந்திணை-ஐந்துநிலம்
  

4. ‘இக்கருத்தே ....................உணர்க”-இக்கருத்தேபற்றி- உய்த்து  உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும்
கருத்துபற்றி காடுறை உலகம் மைவரை உலகம் தீம்புனலுலகம் பெருமணலுலகம் ஆகியவற்றுக்கு
முல்லை குறிஞ்சி  மருதம் நெய்தல் எனப் பெயருண்டு என்பதை நிரல் நிறையாக உய்த்துணர்ந்து
கொள்ளல் வேண்டும்.