பக்கம் எண் :

புணர்தல் பிரிதல் இருத்தல் சூ.16129

அகப்பொருளாவது     புணர்ச்சியாகலானும்  அஃது  இருவர்க்கும்  ஒப்ப  நிகழ்தலானும் புணர்ச்சியை
முற்கூறி,  புணர்ந்துழியல்லது  பிரிவின்மையானும்  அது   தலைவன்   கண்ணதாகிய  சிறப்பானுந் தலைவி
பிரிவிற்குப்    புலனெறி   வழக்கு   இன்மையானும்  பிரிவினை   அதன்பிற்  கூறி,  பிரிந்துழித்  தலைவி
ஆற்றியிருப்பது  முல்லையாகலின்  இருத்தலை  அதன்பிற்கூறி, அங்ஙனம்  ஆற்றியிராது  தலைவனேவலிற்
சிறிது  வேறுபட்டிருந்து  இரங்கல்   பெரும்பான்மை   தலைமகளதேயாதலின்  அவ்விரங்கற்   பொருளை
அதன்பிற்  கூறி,  இந்நான்கு   பொருட்கும்   பொதுவாதலானுங்5   காமத்திற்குச்  சிறத்தலானும் ஊடலை
அதன்பிற் கூறி இங்ஙனம் முறைப்படுத்தினார்.
  

நான்கு    நிலத்தும்  புணர்ச்சி  நிகழுமேனும்  முற்பட்ட   புணர்ச்சியே  புணர்தற்  சிறப்புடைமையிற்
குறிஞ்சியென்று  அதனை  முற்கூறினார்.  அவை   இயற்கைப்  புணர்ச்சியும்  இடந்தலைப்பாடும் பாங்கற்
கூட்டமும்  தோழியிற்  கூட்டமும்  அதன் பகுதியாகிய  இருவகைப்  குறிக்கண்  எதிர்ப்பாடும் போல்வன.
தலைவன்  தோழியைக்  குறையுறும்  பகுதியும்  ஆண்டுத்தோழி  கூறுவனவுங் குறைநேர்தலும் மறுத்தலும்
முதலியன புணர்ச்சி நிமித்தம்.
  

இனி,     ஓதலும் பகையும் தூதும் (25) அவற்றின்  பகுதியும்  பொருட்  பிரிவும் உடன்போக்கும் பிரிவு
ஒன்றாத் தமரினும் பருவத்துஞ்  சுரத்தும்.................தோழியொடு  வலித்தன்’ (41)  முதலியன  பிரிதனிமித்தம்,
பிரிந்தபின்  தலைவி  வருந்துவனவுந் தோழியாற்று  வித்தனவும்  பாலையாதலிற்  பின்னொருகாற் பிரிதற்கு
நிமித்தமாம். அவை பின்னர்ப் பிரிவிற்கு முன்னிகழ்தலின்.


5. புணர்ச்சியின்ப   மிகுதிக்குக்   காரணமாவதாலும்   பிரிவினால்   தோன்றுதலாலும்  பிரிந்தபோது
ஆற்றியிருப்பதாலும், ஆற்றுதல்  நீடித்து  இரங்குதல் மிகுவதாலும்  ஆக நான்கு வகையினும் ஊடல்
தோன்றுதலின் நான்கு நிலத்துக்கும் பொது எனப்பட்டது ஊடல்.