சூழ்ந்தவை செய்துமற் றெம்மையு முள்ளுவாய் வீழ்ந்தார் விருப்பற்றக் கால்.” |
(கலி-69) |
இஃது ஊடல். |
பரியுடை நன்மான் பொங்குளை யன்ன வடைகரை வேழம் வெண்பூப் பகருந் தண்டுறை யூரன் பெண்டிர் துஞ்சூர் யாமத்துந் துயிலறி யலரே.” |
(ஐங்குறு-13) |
இஃது ஊடனிமித்தம். |
பிறவும் வேறுபட வருவனவெல்லாம் அறிந்து இதன்கண் அடக்கிக் கொள்க. |
(14) |
பாரதியார் |
16. புணர்தல்...........பொருளே |
கருத்து:- இச்சூத்திரம் அகப்பொருட் பகுதியிற் சிறந்த அன்பினைந்திணைக்கு நேருரிமைகொண்ட ஒழுக்க வகைகளை உணர்த்துகிறது. |
பொருள்:- புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடலிவற்றின் நிமித்த மென்றிவை - கூடுதல், பிரிதல், பிரிவிடையாற்றியிருத்தல், ஆற்றாதிரங்கல், புலவி என்ற ஐந்தும் அவற்றிற்கியைபுடைய நிமித்தங்களுமே; தேருங்காலைத் திணைக்குரிப்பொருளே - ஆராயும் பொழுது அன்பினைந்திணையெனற்குச் சிறந்துரிய பொருள்களாம். |
குறிப்பு:- இதில் ஈற்றேகாரம் தேற்றமாகும். முதல்கரு உரிப்பொருள்களனைத்தும் அகத்திணைப் பகுதியாகவே அமைத்துக்கோடல் தவறன்றாயினும் திணையென்பது ஒழுக்கங்கண்ணிய பேராதலால் அன்பினைந்திணையெனற்குப் புணர்தல் பிரிதல் முதலிய தலைமக்கள் ஐந்தொழுக்கங்களே சிறப்புரிமையுடைய பொருள்களாகும் என்பதை இச்சூத்திரம் விளக்குகிறது. |
நிமித்தமாவது ஒவ்வோரொழுக்கத்தை யடுத்து முன்னும் பின்னும் முதலும் முடிவுமாகத் தொடுத்து அவ்வொழுக்கத்திற்கு |