யாக்கிப் பொதுப்பட நின்றது எனவுமாம்.2 ஓரிடத்து என்றமையான், மேற்சொல்லப்பட்ட ஐவகை உரிப்பொருளும் போல் எல்லாத் திணைக்கும் பொதுவாகி வருதலன்றி, கொண்டு தலைக்கழிதல் பாலைக்கண்ணும். பிரிந்தவன் இரங்கல் பெருந்திணைக் கண்ணும் வரும் என்று கொள்க. கொண்டுதலைக் கழிதலாவது உடன் கொண்டு பெயர்தல், அது, நிலம் பெயர்தலின் புணர்தலின் அடங்காமையானும், உடன கொண்டு பெயர்தலின் பிரிதலின் அடங்காமையானும் வேறு ஓதப்பட்டது. பிரிந்தவன் அடங்காமையானும், வேறு ஓதப்பட்டது. பிரிந்தவன் இரங்கலாவது, ஒருவரை ஒருவர் பிரிந்த இடத்து இரங்கல். அது, நெட்டாறு சென்றவழி இரங்குதல் இன்மையானும்3 ஒருவழித் தணந்த வழி4 ஆற்றுதலின்றி வேட்கை மிகுதியால் இரங்குதலானும், வேறு ஓதப்பட்டது. ஏறிய மடற்றிறமும் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறமும் முதலாயின பொருள். இது பெருந்திணைக்கு உரித்து5. (இடத்தான் என்பது வேற்றுமை மயக்கம் ஏகாரம் ஈற்றசை) (17) |