‘வானமூர்ந்த’ என்னும் அகப்பாட்டினுள், |
“மெய்புகு வன்ன கைகவர் முயக்க மலரும் பெறுகுவர் மன்னே.” |
எனக் கூறி, அழுதன் மேவலவாய்க் கண்ணுந் துயிலுமெனஇரங்க மீக்கூறியவாறு முணர்க. |
‘குறியன்ன’ என்னும் அகப்பாட்டும் அது. இவை பாலைக்கண் இரங்கல் நிகழ்ந்தது. |
இங்ஙனம் இச்சூத்திர விதி உண்மையிற் சான்றோர். அகத்தினுங் கலியினும் ஐங்குறுநூற்றினும் பாலைக்கண்ணே உடன் போக்கு நிகழ்ந்த செய்யுட்களைத் கோத்தாரென்றுணர்க. |
இல்லிருந்து செந்தீயோம்பல் வேளாளர்க்கு இன்மையிற் கொண்டுதலைக்கழிதல் அவர்க்கு உரியதாயிற்று, ஒழிந்த மூன்று வருணத்தோருள் தமக்குஉரிய பிரிவின்கட் செந்தீயோம்பு வாரை நாட்டிப் பிரிப; ஆகலான், அவர்க்கு ஏனைப் பிரிவுகள் அமைந்தன. இதனைக் ‘கொடுப்போ ரின்றியுங் கரணமுண்டே (143) எனக்கற்பியலிற் கரணம் வேறாகக்கூறுமாறு ஆண்டுணர்க ‘வேர்முழு துலறி நின்ற’ என்றும் மணிமிடை பவளத்துள். |
‘கூழுடைத் தந்தை யினுடைய வரைப்பி னூழடி யொறுங்கினு முயங்கும்’ |
எனவும், ‘கிளியும் பந்தும்’ என்னும் களிற்றியானை நிரையுள், |
‘அல்குபத மிகுந்த கடியுடை வியனகர்’ |
எனவும், நெல்லுடைமை கூறிய அதனானே வேளாண் வருணமென்பது பெற்றாம். |
(15)
|
பாரதியார் |
17. கொண்டுதலை.........................தான. |
கருத்து:- இதுமேலைச் சூத்திரத்தில் திணைக்குரிப் பொருளென விளக்கிய ஐந்தனுளடங்காதனவாய்த் தம்மியல் பால் அகத்திணைக்களுக்குரிப் பொருள்களாய் ஆட்சிபெறும் பிற சிலவும் உண்டெனக் கூறுகிறது. |