பக்கம் எண் :

கலந்த பொழுதும் காட்சியும் அன்ன சூ.18145

கொண்டு    தலைக்   கழிந்த   விடத்துத்   தலைவனும்   தலைவியும்  இடைச்சுரமருங்கில்  தமர்வந்து
பிரிப்பரோ   என   அஞ்சியிரங்குதலும்  மகளைக்  காணாது   செவிலியும்  நற்றாயும் இரங்குதலும் ஆகிய
இரக்கத்தையே பிரிந்தவண் இரங்கல் எனக்குறிப்பிட்டார் ஆசிரியர்.
  

இளம்பூரணர்     கொண்டு   தலைக்கழிதலைப்   பாலையிலும்   பிரிந்தவன்   இரங்கலை  காமம்மிக்க
கழிபடர்கிளவியாகக்    கொண்டு    பெருந்திணையிலும்    அடக்கியது  பொருந்தாது.  அகன்  ஐந்திணை
கூறிவரும்    இடத்தில்    பெருந்திணையைப்    புகுத்தினார்   என்றல்  அமையாது  ஓரிடம்  என்பதற்கு
வேளாளரிடம்   என   நச்சினார்க்கினியர்   கூறியதும்   அமையாது. சாதியை இடையில் புகுத்த வேண்டிய
இன்றியமையாமை என்னோ?
  

பாரதியார்     கொண்டுதலைக்   கழிதலும்   அப்போது   இரங்கலையும்   ஏற்றவாறு   ஏதேனும்  ஓர்
உரிப்பொருளில்    சார்த்தலாம்    என்பர்.    அதாவது    குறிஞ்சி.   பாலைத்திணையாகவோ   நெய்தல்
திணையாகவோ   இடத்துக்கேற்றவாறு    சார்த்தலாம்    என்பது     அவர்   கருத்துப்போலும்.   இன்ன
திணையிற்சாரும்   என   அவர்  வரையறை  செய்யவும்  இல்லை. உதாரணச் செய்யுள்களிலும் திணையாது
எனக்கூறவும் இல்லை.
  

18.  

கலந்த பொழுதும் காட்சியும் அன்ன (18)

  

ஆ. மொ. இல.
  

The time of union and the sight of love are of the same nature.
  

இளம்பூரணர்
  

18.  கலந்த பொழுதும்..............அன்ன
  

இதுவும் அது.
  

(இ-ள்)     கலந்த  பொழுதும்-தலைவனைக்  கண்ணுற்ற  வழிமனநிகழ்ச்சி  உளதாங்காலமும், பின்னர்க்
குறிப்பறியுந்துணையும்   நிகழும்   நிகழுச்சியும்,  காட்சியும்  தலைவியை  எதிர்ப்படுதலும்  அன்ன-ஓரிடத்து
நிகழும் உரிப்பொருள்.