கலந்தபொழுது என்பது, தலைமகளைக் கண்ணுற்றவழி மனநிகழ்ச்சியுளதாங் காலம்; அக் காட்சிப் பின்னர்க் குறிப்பறியுந் துணையும் நிகழும் நிகழ்ச்சி. காட்சியாவது, தலைவியை எதிர்ப்படுதல். குறிப்பறிந்த பின்னர்ப் புணருந்துணையும் நிகழும் முன்னிலையாக்கல் முதலாயின புணர்தல் நிமித்தம். இவை அந்நிகரனவன்றிப்1 பொதுப்பட நிற்றலின் வேறு ஓதப்பட்டன. அன்ன என்பது ஓர் இடத்து நிகழும் உரிப்பொருள் என்றவாறு. ஓரிடமாவது கைக்கிளை. |
அஃதேல், இவையும் புணர்தல் நிமித்தம் ஆயினால் வரும் குற்றம் என்னை எனின், ஒருவன் ஒருத்தியை எதிர்ப்பட்டுழிப் புணர்ச்சி வேட்கை தோற்றாமையும் உண்மையின் காட்சி பொதுப்பட நின்றது. ஐயம் முதலாகக் குறிப்பறிதல் ஈறாக நிகழும் மனநிகழ்ச்சி, தலைமகள் மாட்டுக் காமக்குறிப்பு உணராது கூறுதலின், புணர்தல் நிமித்தம் அன்றாயிற்று2 |
நச்சினார்க்கினியர் |
18. கலந்த பொழுதுங்.....................மன்ன. |
இதுவும் பாலைக்கட் குறிஞ்சி மயங்கு மென்கின்றது. |
இதன் பொருள்:- கலந்த பொழுதும் காட்சியும்-இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த காலமும் அதன் முன்னர்த்3 தாகிய வழிநிலைக் காட்சி4 நிகழ்ந்த காலமும், அன்ன-முன்னர்ச் - சூத்திரத்துட் கொண்டுதலைக் கழிந்த காலத்தை உடைய என்றவாறு. |
|
1. அந்நிகரன-குறிஞ்சி முதலியவற்றில் ஒன்றிற் சாரும் தன்மை. |
2. சிவலிங்கனார் விளக்கம் பார்க்க. |
3. முன்னர் இடமுன்னர் இயற்கைப் புணர்ச்சிக்குப் பிறகு உள்ளது. |
4. வழிநிலைக்காட்சி-இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர் நிகழும் காட்சி. |