பக்கம் எண் :

கலந்த பொழுதும் காட்சியும் அன்ன சூ.18147

என்றது,     முன்னர்க்   குறிஞ்சி    பாலைக்குரிய   இருவகை  வேனிற் கண் நிகழ்ந்தாற்போல இவையும்
இருவகை   வேனிற்கண்   நிகழுமென்றவாறு,   மழைகூர் காலத்துக்  புறம்போந்து விளையாடுதலின்மையின்
எதிர்ப்பட்டுப்   புணர்தல்   அரிதாகலானும்,   அது  தான் இன்பஞ் செய்யாமை யானும் இருவகை வேனிற்
காலத்தும் இயற்கைப் புணர்ச்சிநிகழுமென்றது இச்சூத்திரம்.
  

முன்னர்க்   கூதிரும்   யாமமும்    முன்பனியுஞ்  சிறந்ததென்றது  இயற்கைப்  புணர்ச்சிப்  பின்னர்க்
களவொழுக்கம் நிகழ்தற்குக் காலமென்றுணர்க. அது.
  

“பூவொத் தலமருந் தகைய வேவொத்
தெல்லாரு மறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்றோன் மாமலைப்
பரீஇ வித்திய வேனற்
குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே” 
  

(குறு-72)
 

“எனவரும்.   இக்குறுந்தொகையுட்  குரீஇ  யோப்புவாள் கண்ணென வழி நிலைக் காட்சியைப் பாங்கற்குக்
கூறினமையின் அத்தினைக்கதிர் முற்றுதற்கு உரிய இளவேனிலும் பகற்பொழுதுங் காட்சிக்கண் வந்தன.
  

‘கொங்குதேர் வாழ்க்கை’ என்பதும் இளவேனிலாயிற்று. தும்பி கொங்கு தேருங் காலம் அதுவாகலின்.
  

கலத்தலுங்     காட்சியும்     உடனிகழுமென்றுணர்க.     கலத்தலின்றிக்      காட்சி    நிகழ்ந்ததேல்,
உள்ளப்புணர்ச்சியே யாய் மெய்யுறு புணர்ச்சியின்றி வரைந்துகொள்ளு மென்றுணர்க.
  

பாரதியார்
  

18. கலந்த.............................அன்ன
  

கருத்து:-  இதுவும்,  ஐந்திணை  வகுப்பில் அடங்காதனவாய்   அகப்பகுதியில்   உரிப்பொருள் ஆவன
இன்னுஞ் சிலவற்றைக் கூறுகின்றது.
  

பொருள்:- கலந்த  பொழுதும் - ஒத்த  தலைமக்கள் தம்மிடைப்  பாலதாணையின் முதல் எதிர்ப்பாட்டில்
நிகழ்வும்.   (கலந்த)   காட்சியும்  - அவ்வாறு   தலைப்பட்டார்   தம்முள்  அறிவுடம் படுத்தற்குக் கூட்டிக்
குறிப்புரைக்கும்   நாட்டமும்;  அன்னமேலைச்  சூத்திரத்திற்கு  கூறியதுபோல)  ஏற்புழி அகவொழுக்கத்திற்கு
உரிப்பொருளாதற் குரியவாகும்.