மிரண்டும் கூட்டியுரைக்கும்” பெற்றி விளக்கப்படுதல் காண்க. முன்னலும் முயற்சியுமின்றித் தாமே தமியராய்த் தலைப்படல் கலந்தபொழுதாகும்; தலைப்பட்டவர், ஒருவர் மற்றவர் குறிப்பறிய நாடும் நோக்கு கலந்த காட்சி (அறிவினாட்டம்) ஆம். குறிக்கொண்டு நோக்குந்தலைவன், தலைமகள் குறிப்புநோக்காலவள் கருத்தும் தன்னதேபோற் காதல் கண்ணியதெனக் கண்டு தனக்குத்தான் தேற்றுமவன் கூற்றில், ஐயமும், அச்சமும், தெளிந்து மகிழ்தலும் ஒருங்கு காணக்கிடக்கின்றன. முதலில் அவள் கருத்தறியாமையாலவன் அஞ்சுவதும், அச்சமகற்றுமவள் அளிநோக்கும், அதன் மேலிருவரு மறிவுடம் பட்டுள்ளம் புணர்ந்துழி அவனவள் நலம் பாராட்டலும் ஆகிய மூன்றுமினிது விளங்கும். “கூற்றமோ” என்றதாலச்சமும் “கண்ணோ” என்றதால் கண்ணோடுமவள் காதல் நோக்கும். “பிணையோ” என்றதால் அறிவு டம்பட்டு ளங்கலந்துழி அவனவளைப் பாராட்டலும் இனிதமையச் சிறு குறளிற்செறித்த செவ்வி வியத்தற்குரித்து. |