பக்கம் எண் :

150தொல்காப்பியம் - உரைவளம்

(இ-ள்)  புணர்தற்குக்  காரணமான  நிகழ்ச்சிகளும்  புணர்ந்த  பின்  காணும் காட்சிகளும் முன் கூறிய
கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தவண் இரங்கலும் ஓரிடத்தானமைபோல ஓரிடத்தாகும் என்றவாறு.
  

கலந்தபொழுது-கலத்தற்கு     (புணர்ச்சிக்கு)க்  காரணமான  காலம்;  அதாவது  காட்சி  ‘ஐயம்’ தெளிவு
குறிப்பறிதல்   ஆகிய   ஆகிய   நிகழ்ச்சிகள்   பொழுது  என்பது நிகழ்ச்சிகளுக்கு ஆயது. காட்சி என்பது
புணர்ந்த   பின்னர்த்    தலைவியின்    செலவும்    அவளை   ஆய  வெள்ளம்  வழிபடுதலும்  பிறவும்
ஆயகாட்களை
  

புணர்ச்சி     என்றது   இயற்கைப்   புணர்ச்சியை.   புணர்ச்சிக்கு  முன்னர்   நிகழும்  காட்சி,  ஐயம்
முதலியனவும்   புணர்ச்சி   பின்னர்   நிகழும்   காட்சிகளும்   இயற்கைப் புணர்ச்சிக்கும் இடந்தலைப்பாடு
முதலிய   புணர்ச்சிக்கும்   நிமித்தமாக   அமைதலின்   அவையிரண்டும்  குறிஞ்சித்திணையின் பாற்சாரும்
என்க.
  

புணர்ச்சிக்கு   முன்னர்  நிகழும்  காட்சி,  ஐயம்  முதலிய நிமித்தங்கள் இருவர் மனத்தும் நிகழ்வனவே;
ஆனால்    ஒருவர்   ஒருவரையறிந்திலர்;   அவ்வளவே   ஆதலின்  அந்நிமித்தங்களும்  குறிஞ்சிக்குரிய
நிமித்தங்களாகவே கொள்ளப்படும் என்க.
  

நச்சினார்க்கினியர்    அன்ன    என்பதற்குக்கூறும்   மாட்டேறு   தொடர்பற்றது.   இளம்பூரணர்  இது,
கைக்கிளைக்குரியது என்றதை முன்னர்ப் பெருந்திணைக்குரியதை மறுத்தாங்குக் கூறி மறுக்க.
  

இச்சூத்திரம்    ‘கலந்த   பொழுது   காட்சியும்  அன்ன’  என்றிருத்தல்  வேண்டுவது  ஏடெழுதினோர்
பிழையாக,  ‘கலந்த பொழுதும்’  என  உம்மையொடு  இருப்பதாயிற்று எனக்கொண்டு அருணாசலம் பிள்ளை
அவர்கள்,
  

“தலைவனும் தலைவியும்கூடிச் சென்ற காலத்துத்
தலைவியின் தமர் தேடிச்சென்று காண்டலும்
சிறுபான்மை நிகழும் என்றவாறு”

  

என்பர்.    உடன்போயபின்னர்ச்   செவிலி   இடைச்சுரம்   வரை   சென்று  கண்டாரையும்  அறிவரையும்
இவ்வழித் தம்முளே கூடிச்சென்ற இருவரைக் கண்டீரோ என வினவுதலும், அதற்கு அவர்