கண்டேம் எனக்கூறுதலும் உள்ள இலக்கியங்களே காணப்படுகின்றன. நற்றாய் சுரவழிச்சேறல் இல்லை. உடன்போய இருவரையும் தாயர் காண்டல் இல்லை. பிள்ளையவர்கள் அதனால் சிறுபான்மை காண்டல் உண்டு என்றார். இது இலக்கணம் இல்லை; அவர் கூற்றுப் பொருந்தாது. |
19. | முதல்எனப் படுவது ஆயிரு வகைத்தே | (19) |
|
ஆ.மொ.இல. |
The division said to be ‘Muthal’ is of two kinds. |
பி.இ.நூ. |
நம்பி 8 |
நிலமும் பொழுதும்என முதல் இரு வகைத்தே. |
இல.வி.அ.9 - - |
|
இளம்பூரணர் |
19. முதல்எனப்........................வகைத்தே |
இதுவும்1, ஐயம் அறுத்தலை நுதலிற்று. |
(இ-ள்) முதல் எனப்படுவது - மேல் எடுத்தோதப்பட்டவற்றில் முதல் என்று சொல்லப்படுவது, அ இருவகைத்து - நிலமும் காலமும் ஆகிய அவ்விருவகையை உடையது. |
எனவே, ஏனையவெல்லாம்2 உரிப்பொருள் என்றவாறாம். இதனாற் பெற்றது என்னை எனின், முதல் கரு உரிப்பொருள் என அதிகரித்து வைத்தார்; இனிக் கருப்பொருள் கூறுகின்றார்; உரிப்பொருள் யாண்டுக் கூறினார் என ஐயம் நிகழும்; அது |
|
1. இதுவும் என்ற உம்மை இறந்தது தழீஇயது கொண்டு தலைக்கழிதல் முதலியன எத்திணையைச்சாரும் என்ற ஐயத்தை அகற்றியது போல இச்சூத்திரமும் ஓர் ஐயத்தை அகற்றுதலின் என்க. |
2. ஏனைய எல்லாம் என்றது நிலமும் பொழுதும் வரையறை செய்யாத சூத்திரங்களில் கூறப்பட்டன எல்லாம் |