பக்கம் எண் :

152தொல்காப்பியம் - உரைவளம்

விடுத்தல் என்க3
  

நச்சினார்க்கினியர்
  

19. முதலெனப்..................................வகைத்தே.
  

இது முற்கூறிய முதற்பகுதியைத் தொகுத்து எழுதிணையும் இவ்வாற்றானுரிய வென்கின்றது.
  

இதன்  பொருள்:-  முதல்  எனப்படுவது - முதலென்று கூறப்படும் நிலனும் பொழுதும், ஆயிருவகைத்து
- அக்கூறியவாற்றான் இருவகைப்படும் யாண்டும் என்றவாறு.
  

இது ‘கூறிற்றென்றல்’4 (666) என்னும் உத்திவகை.
  

இதன்     பயன்  முதல்  இரண்டுவகை  என்றவாறாம்.  தமக்கென  நிலனும்  பொழுதும்  இல்லாத
கைக்கிளையும்   பெருந்திணையும்   நிலனில்லாத  பாலையும்  பிறமுதலோடு  மயங்கிற்றேனும்  அவை
மயங்கிய   நிலனும்   பொழுதும்   அவ்வத்திணைக்கு   முதலெனப்படுமென்பதாம்.  இது  முன்னின்ற
சூத்திரத்திற்கும் ஒக்கும்.  


3. ‘முதல் எனப்படுவது நிலப்பொழுது’ என முன்னர்க் கூறி (4) ஈண்டும் கூறுவானேன் எனின்  இருவகைப் பிரிவும் (13) என்பது முதலாக முன் சூத்திரங்காறும் முதற்பொருளும் உரிப்பொருளும் கலந்து  கூறினார், இருவகைப்பிரிவும்  ( )  என்பதன்  முன்னர் முதற்பொருளே கூறினார் இனி தெய்வம் உணாவே  (  ) எனக்கருப்   பொருள்   கூறுவார்   கலந்து  கூறியவற்றுள் நிலமும் பொழுதும் முதல் எனப்படும் என இங்குக்  கூறியதால்  நிலம்பொழுது  கூறாத  உரிப்பொருள்  பற்றி  மட்டும்  கூறப்பட்ட  சூத்திரங்கள் எல்லாம்   தனியாக   உரிப்பொருள்   பற்றிக்   கூறியனவாதல்  வேண்டும்.  எனவே  உரிப்பொருள் யாண்டுக்கூறப்பட்டது என்னும் ஐயம் விலக்கவே இச்சூத்திரம் மீளவும் கூறப்பட்டது.
 

4. அ இருவகை என்று சுட்டியதால் கூறிற்று என்றலாம்.