குறிப்பு:- ஈற்றேகாரம் தேற்றங்குறிக்கும். முதல், கரு, உரி என்ற அகப்பொருட் பகுதிகள் மூன்றனுள் உரிப்பொருளாவன ஐந்தொழுக்கமும், அவைபோல அகத்துறையில் சிறந்துரிய தலை மக்களின் காதலொழுக்கங்கள் பிற சிலவுமாக வகைபெறுமென்பதை இந்நூலார் மேற்சூத்திரங்களில் விளக்கினார். அது போலவே கருப்பொருள்களும் பலவகைப்படு மென்பதை இனிவருஞ் சூத்திரத்திற் கூறுவர். இவை யிரண்டும் போலாது, யாண்டும் முதற்பொருளாவன நிலமும் பொழுதுமென்றிரண்டே வகைகளில் அடங்குமென்பதை இயைபு நோக்கி இவ்விடைச் சூத்திரத்தால் ஐயமற வரையறுத்து வற்புறுத்துகிறார். இஃது இறந்தது காத்தல், கூறிற்றென்றல், முடிந்தது காட்டல் என்னும் உத்திகளால் அமையுமாதலின், கூறியது கூறலாகாது. |
முதல்கரு உரிஎன முன்னே முறைப்படுத்திக் காட்டியவர் முதற்பொருள் வகையியல்புகளை முதலிற் கூறி, அதையடுத்துக் கருப்பொருள் கூறாமல் உரிப்பொருள்களின் இயல் கூறினார். இவையிரண்டும் அளவு பட்டமையும் இயைபு நோக்கி, அவ்வியைபை வலியுறுத்தும் பொருட்டே ஈண்டு இச்சூத்திரத்தால் முடிந்தது காட்டித் தந்துணிபுரைத்தார். உரிப்பொருளனைத்தும் தலைமக்களின் அன்பினைந்திணை வகைகளில் அமைந்தடங்கும். முதற் பொருள்களும் நிலம்பொழுதெனும் இரண்டே வகையிலடங்கும். இவையிரண்டும் போலாது கருப்பொருள் வகைகள் எண்ணிறந்து ஏற்றபெற்றி விரியு மியல்புடையவாதலால். அளவுபட்ட இவையிரண்டும் முற்கூறி, இவற்றின்பின் இவையல்லாத அளவிறந்தனவாய் வரும் பலவும் கருப்பொருள் வகைகளாகு |