பக்கம் எண் :

156தொல்காப்பியம் - உரைவளம்

இது, கருப்பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)   தெய்வம்   உணா  மாமரம்  புள்  பறை  செய்தி  யாழின்  பகுதியொடு  தொகைஇ-தெய்வம்
முதலாகச்    சொல்லப்பட்டனவும்,    அவ்வகை    பிறவும்   கரு   என  மொழிப-அத்தன்மைய  பிறவும்
கருப்பொருள் என்று கூறுப.
  

அவையாவன முதற்பொருட்கண் தோன்றும் பொருள்கள்1.
  

“மாயோன் மேய காடுறை உலகம்”   

  (அகத்-5)
 

என்றதனால்
  

முல்லைக்குத் தெய்வம் கண்ணன்.
 

“காடுறை உலகம்”.
  

என்றதனானுங்,
  

“காரும் மாலையும் முல்லை”

  (அகத்-6)
   

என்றதனானும், காட்டினும் கார்காலத்தினும் மாலைப்பொழுதினும் நிகழ்பவை2 கொள்க.
  

‘எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்.’

 (அகத்-21)
  

என்றதனானும், நிலமும் காலமும் பற்றி வருவன கருப்பொருள் என்பது உணர்க.
  

உணவு   -  வரகும்  முதிரையும்3.  மா - மானும் முயலும், மரம் - கொன்றையும் குருந்தும் புதலும். புள்
- கானாங்கோழி,  பறை - ஏறுகோட்பறை,   செய்தி - நிரை  மேய்த்தல், யாழின் பகுதி என்பது பண். அது
சாதாரி,   பிறவும்   என்றதனால்,   பூ - முல்லையும்  பிடவும் தளவும், நீர் - கான்யாறு, பிறவும் இந்நிகரன
கொள்க.
  

குறிஞ்சிக்குத்  தெய்வம்   முருகவேள், மை வரையுலகமும் கூதிர் காலமும் நள்ளிருளும் கூறினமையான்,
அந்நிலத்தினும் காலத்தினும் நிகழ்பவை கொள்க. உணவு - திணையும்  


1. கருப்பொருள்-தோன்றும்பொருள்.

2. நிகழ்பவை-கருப்பொருளின் நிகழ்ச்சிகள் 

3. முதிரை-பயறுவகை