பாரதியார் |
20. தெய்வம் .................மொழிப |
கருத்து :- இது முதல் உரிப்பொருள்களில் அடங்காவாய் அகத்திணைக்கு உறுப்பாம் கருப்பொருள் வகை உணர்த்துகிறது. |
பொருள்:- தெய்வம் - வழிபடு கடவுட் பகுதி; உணாவே - ஊண் வகை; மா-விலங்கு; மரம் - மரஞ்செடிகொடி வகை; புள் - பறவை வகை; பறை - அவ்வந் நிலங்களுக்குரிய பறை வகைகள்; செய்தி - தொழில் வகை; யாழின் பகுதியொடு தொகைஇ-யாழ் வகைகளோடு கூட்டி; அவ்வகை பிறவும்-அவை போல அகத்திணைகளுக்குச் சார்பாக வகைப்படுவன மற்றையனவும்; கரு என மொழிப - கருப்பொருள்கள் என்று கூறுவர் அகப்பொருணூலார். |
குறிப்பு:- முன்னைச் சூத்திரக் குறிப்புரையில் சுட்டியாங்கு முதலும் உரியுமல்லாத அகப்பொருள்களுள் அகத்திணைக்குக் கருவாய் அமைவன யாவும் கருப்பொருள்கள் என்பர் அகப்பொருள் நூலார். இச்சூத்திரத்தில் அளவற்ற கருப்பொருள் வகைகள் அனைத்தையும் வகுத்து நிறுத்தல் கூடாமையின் சிறந்தன சில சுட்டி அவ்வகை பிறவும் கரு என்று கூறி, மொழிந்த பொருளோடொன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்று முடிய வைத்தார் தொல்காப்பியர். |
21. | எந்நில மருங்கின் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் வந்த நிலத்தின் பயத்த ஆகும். | (21) |
|
ஆ. மொ. இல. |
The flower and the bird of one region and season when not found in the region and season, aseribed to them, may belong to region where they appear. |
இளம்பூரணர் |
21. எந்நில மருங்கிற்..............ஆகும். |
இது, மேலதற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று |
(இ-ள்) எந் நிலமருங்கின் பூவும் புள்ளும் - யாதானும் ஓர் நிலத்திற்குரிய பூவும் புள்ளும், அந் நிலம் பொழுதொடு வாராவாயினும் - அந்நிலத்தொடும் பொழுதொடும் வந்தில |