பக்கம் எண் :

162தொல்காப்பியம் - உரைவளம்

வாயினும், வந்த நிலத்தின் பயத்த ஆகும் - வந்த நிலத்தின் பயத்த ஆகும்.
  

“வந்தது  கொண்டு   வாராதது  முடித்தல்”  (மரபு 112)  என்பதனால்,  சிறுபான்மை  ஏனையவும்1 வந்தவழிக் கண்டு கொள்க இவ்வாறு வருவன திணை மயக்கம் அன்றென்றவாறு.2
  

நச்சினார்க்கினியர்
  

21. எந்நில மருங்கிற்...................வாகும்.
  

இது முற்கூறிய கருப்பொருட்குப் புறனடை.
  

இதன்   பொருள்:-  எந்நில மருங்கிற் பூவும் புள்ளும், எழுதிணை நிகழ்ச்சியவாகிய நால்வகை நிலத்துப்
பயின்ற  பூவும்  புள்ளும்,   அந்நிலம்   பொழுதொடு   வாரா   ஆயினும்.  தத்தமக்கு  உரியவாகக் கூறிய
நிலத்தொடுங்   காலத்தொடும்   நடவாமற்   பிற  நிலத்தொடுங் காலத்தொடும் நடப்பினும், வந்த நிலத்தின்
பயத்த ஆகும்-அவை வந்த நிலத்திற்குக் கருப்பொருளாம் என்றவாறு.
  

ஒடு     ‘அதனோடியைந்த  ஒருவினைக்  கிளவி’  யாதலின்  உடன்  சேறல்  பெரும்பான்மையாயிற்று3,
வினைசெய்   யிடத்தினிலத்திற்   காலத்தின்   என்பதனான்   நிலத்தின்  பயந்தவாமெனப் பொழுதினையும்
நிலமென்று அடக்கினார்.4 பூவைக் கருவென ஓதிற்றிலரேனும்  


1. ஏனைய-உணா, மா முதலிய கருப்பொருள்கள்
  

2. இத்தொடர்க் கருத்து ஆய்வுக்குரியது
  

3. ஒரு  வினைக்கிளவி  உடன்நிகழ்ச்சிக்கிளவி.  பூவும்  புள்ளும்  அந்நிலம் பொழுதொடு வாராவாயினும்
என்பது  பாடலின்  பூவும்  புள்ளும்  நிலமும்  பொழுதும்  வர  அவற்றுடன் வாராவாயினும் என்னும்
பொருளது  அதனால்  ஒரு  வினைக்கிளவியாக  ஒரு உருபு வந்தது. நிலமுடனும் பொழுதுடனும் வரும்
பூவும் புள்ளுமே பெரும்பான்மையாம்
  

4. நிலம்  பொழுதொடு  முன்னர்க்  கூறிய ஆசிரியர்  பின்னர்  பொழுதை  விட்டு வந்த  நிலம் என
நிலத்தை மட்டும் கூறியது ஏன் எனின் பொருதை நிலத்தில். ஒரு  செயற்கு  நிலம்  காலம்  முதலிய
தேவையாதலின்  காலம் நிலத்துள் அடங்கும். இதை  வினை  செய்  இடத்தின்  காலத்தின் (தொல்-
சொல்-வினை) என்னும் சூத்திரத்தால் அறியலாம்.