முற்கூறிய மரத்திற்குச் சினையாய் அடங்கிற்று. ஒன்றென முடித்தலான் நீர்ப்பூ முதலியனவும் அடங்கும்.5 இங்ஙனம் வருமிடஞ் செய்யுளிடமாயிற்று.
உதாரணம் :- |
“தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்.” |
(கலி-52) |
இது மருதத்துப்பூ, குறிஞ்சிக்கண் வந்தது. |
“உடையிவ ளுயிர் வாழா ணீநீப்பி னெனப் பல விடைகொண்டியா மிரப்பவு மெமகொள்ளா யாயினை கடைஇய வாற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை யடையொடு வாடிய வணிமலர் தகைப்பன.” |
(கலி-3)
|
இது மருதத்துப்பூ, பாலைக்கண் வந்தது. |
“கண்மிசை மயிலாலக் கறங்கியூ ரலர்தூற்றத் தொன்னல நனிசாய நம்மையோ மறந்தைக்க வொன்னாதார்க் கடந்தடூஉ முரவுநீர் மாகொன்ற வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்.” |
(கலி-27)
|
இது குறிஞ்சிக்குப் பயின்ற மயில் பாலைக்கண் இளவேனிற் கண் வருதலிற் பொழுதொடு புள்ளு மயங்கிற்று. கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியில் வரைவின்றிப் பூ மயங்கியவாறு காண்க. ஒன்றென முடித்தலாற் பிற6 கருப்பொருள் மயங்குவன உளவேனுங் கொள்க (19) |
பாரதியார் |
21. எந்நில..........பயந்தவாகும் |
கருத்து: இது கருப்பொருண் மயக்கமும் கடிதலில்லை யென்பது கூறுகின்றது. |
பொருள்: எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் - எந்த நிலச் சார்பில் கூறப்படும் பூ, புள் முதலிய கருப்பொருள்களும் அந்நிலம் பொழுதொடு வாராவாயினும்-அவ்வக் கருப்பொருட்டுச் சிறந்துரிய |
|
5. நீர்ப்பூ, கொடிப்பூ முதலியனவும் அடங்கும் |
6. பூவும் புள்ளு மல்லா மா மரம் முதலியன. |