பக்கம் எண் :

166தொல்காப்பியம் - உரைவளம்

பொழுதின்    உரிப்பொருளின்    பயனையே   தாமும்   உடையனவாகும்  என்பது  இச்சூத்திரப்பொருள்.
இதனால் கருப்பொருள் மயக்கம் கூறப்பட்டது.
  

தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்  
  

  (கலித்.52)
 

இது  குறி விலக்கல்  ஒழுக்கமாய்க்  குறிஞ்சிக்குரியது.  இதில்  தலைவன்  தாமரைக் கண்ணியனாய் வந்தான்
என்பதால்   தாமரை   மருத   நிலக்கருப்பொருளாதலின்,   அது   அதற்கேற்ப  ஊடற்  பொருள் இன்றிக்
குறிஞ்சிப் பொருளுக்கே துணை செய்வதாய்ப் பயன்பட்டது என்க.
  

வந்த     நிலத்தின்   பயத்த   என்பதற்குத்   தாம்   மயங்கி  வந்த  நிலத்தின்  பொருளே  தமக்கும்
ஏற்புடையனவாகத் தம்  நிலத்தின் பொருளைவிட்டுப் பயன்படுவனவாம் என்க.
  

22. 

பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய திணை
தொறும் மரீஇய திணை நிலைப் பெயரே.
(22)

  

ஆ. மொ. இல.
  

The names of  particular region current in the said
region are of two kinds-the name of noun and the
name of verb.
  

இளம்பூரணர்

22. பெயரும் வினையுமென்று...............பெயரே.
  

இதுவும், கருப்பொருளின் பாகுபாடாகிய மக்கட்டிறம்1 உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)  பெயரும்   வினையும்  என்று  அ  இருவகைய  -  குலப்  பெயரும்  தொழிற்பெயரும்  என
அவ்விருவகைப்படும்,   திணைதொறும்   மரீஇய   திணைநிலைப்பெயர் -  திணைதொறும் மருவிப் போந்த
திணை நிலைப்பெயர்.  


1. தெய்வம்    உணாவே    (  )  என்னும்  சூத்திரத்தில்  அவ்வகை  பிறவும்  என்றதனால்  தழுவிக்
கொள்ளப்பட்ட மக்களது திறம்.