170 | தொல்காப்பியம் - உரைவளம் |
இனி, ஒரு நிலத்துள்ளார் அந்நிலத்திற்குரிய தொழில் மேற் கொள்ளாது பிறிது தொழில் கையாளுவராயின், அவரவர் செய்தொழில் வேற்றுமையால் தொழில் குறிக்கும் ஏற்புடை வினைப்பெயர்களாலும் அழைக்கப்படுவர். நுளைஞர், பரவர் என்பன நெய்தனிலஞ் சுட்டிய மக்கட் பெயர் வலையர். உமணர் என்பன நிலஞ்சுட்டாது வலைவீசிப் பிழைக்குந் தொழிலுடையாரையும், உப்பு உண்டாக்கி விற்கும் தொழிலுடை யாரையும் சுட்டு வினைப் பெயர்கள் தொழில் எதுபுரிந்தும் நெய்தனிலம் வதிபவரைப் - பரவர் அல்லது நுளைஞர் என வழங்கல் ஒருமுறை; அப்போது அப்பெயர் நெய்தனிலமக்கள் என்னும் பொருட்டாகும் இனி, எந்நிலத்துறையினும் வலைத்தொழில் புரிந்து வாழ்வார் என்பதைக் குறிக்குங்கால், வளையர் என்னும் வினைப்பெயரால் அத்தொழிலுடையாரைச் சுட்டுவது ஒருமுறை. தமிழகத்திற் பண்டைக் காலத்தில் பிறப்பால் சாதி வகுப்புகள் இல்லாமையானும், தமிழ் மக்களெல்லாரும் விரும்பி யாங்குத் தத்தமக்கேற்புடைய தொழில் கொள்ளும் உரிமையுடையராதலாலும், நிலம் தொழில் வகைகளால் வேறுபடினும் உணவு, மணங்களில் வேறுபாடுன்றி யாண்டும் எல்லாரும் ஏற்று பெற்றி கலந்து ஒன்றிவாழ்ந்தாராதாலானும், அவர் அகவொழுக்கங்கூறும் புலனெறி வழக்கில் அக்காலத்தவரிடை நிலை பேறுற்ற நிலப்பெயர் வினைப்பெயர்களால் தமிழ் மக்கள் அழைக்கப்படும் மரபுண்மையைத் தொல்காப்பியர் ஈண்டு விளக்கிப் போந்தார். நிலம்பற்றிய மக்கட் பெயர், பெயர்ப்பெயர்; செய்யும் வினைபற்றிய மக்கட் பெயர் வினைப்பெயர். | அகம் 110-ஆம்பாட்டில், போந்தைப் பசலையார், நுளைச்சியைத் தலைவியாகவும், நெடுந்தேரூரனைத் தலைவனாகவும், திணைநிலைப்பெயர் அமைத்துக் கூறியுள்ளார். நற்றிணை 45-ஆம் பாட்டில் | “நெடுங்கொடி நுடங்கு நியமமூதூர்க் | கடுந்தேர்ச் செல்வன் காதற்”, றலை மகனாகவும், நிணைச் சுறா வறுத்த வுணக்கல் வேண்டி, யினப்புள்ளோப்பும்” புலவு நாறும் பரவர் மகள் தலைமகளாகவும், இவ்வாறு இவ்விருவேறு நிலமக்கள் காதற்றலைமக்களாய் அகத்திணைக்குரியராயமைந்திருப்பது இங்குக் கருதத் தக்கது - அகம் - 280 - ஆம் |
|
|