கூறி மயங்கவைத்தார். ஆரியருள் நான்கு வருணத்தாருக்குமே தமிழரின் அகத்திணைக் களவியல் ஒழுக்க ஆட்சியுரிமை அவர் தம் தரும சாத்திரங்களிலும் வழக்கிலும் இன்மையானும் ஆரிய தரும நூல்கள் கூறும் உயர்பிறப் புரிமையுடைய இடையிருவருணத்தார் தமிழகத்தென்றுமில்லாமையானும், இவருரைகள் பொருந்தாமை யறிக. அன்றியும், தமிழிலக்கண நூல் “........................வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பில் நாற்பெயரெல்லையகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது” எனத் தொல்காப்பியர் தாமும் “வடவேங்கடந் தென்குமரியாயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி, செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடுமுந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்தோனே...................தொல்காப்பியன்” எனத் தொல்காப்பியரின் பாயிரமும் வற்புறுத்துவதானும், இங்குத் தொல்காப்பியரின் சூத்திரங்கள் குறிப்பன எல்லாம் ஆரியவருண அறங்களையல்ல. தமிழ் மரபும் தமிழர் வழக்கங்களுமே யாமென்பது தேற்றம், இவ்வுண்மைகள் இனிவருஞ் சூத்திரங்களுக்கும் ஒக்கும். (20) |