அதற்கு உதாரணம் வெற்பன் என்றும் பாகுபடுத்திக்காட்டுவர் நச்சினார்க்கினியர். அப்பெயர் இரண்டும் நிலத்தினடிப்படையிலும் வரும். இளம்பூரணர் திணைதொறு மரீஇய திணைநிலைப்பெயர் என்பதை ஒரு பெயராகவே கொண்டு அது நிலப்பெயராகவும் வினைப்பெயராகவும் வரும் என்பர். |
செய்யுளில் வரும் ஐந்திணைத் தலைவர் பெயர் எவ்வாறு வரும் என்பதை ஆசிரியர் அடுத்து வரும் சூத்திரத்திற்குறிப்பர். |
23. | ஆயர் வேட்டுவர் ஆடுஉத் திணைப்பெயர் ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே | (23) |
|
ஆ.மொ.இல. |
‘Ayar’ (shephered) and ‘Vettuvar” (Hunter) are the male names of the region among whom there are chiefs. |
இளம்பூரணர் |
23. ஆயர் வேட்டுவர்................உளரே |
இது, நிறுத்தமுறையானே1 முல்லைக்குரிய மக்கட்பெயர் உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) ஆடூஉ திணைப்பெயர் ஆயர் வேட்டுவர் - ஆண் மக்களைப் பற்றி வரும் திணைப்பெயர் ஆயர் எனவும் வேட்டுவர் எனவும் வரும், அ வயின் வரும் கிழவரும் உளர் - அவ்விடத்து வரும் கிழவரும்2 உளர். |
ஆயர் என்பார் நிரை மேய்ப்பார். வேட்டுவர் என்பவர் வேட்டைத் தொழில் செய்வார். அஃது3 எயினர் என்னும் குலப் |
|
1. ‘மாயோன்மேய’ (3) என்பதில் முல்லையை முதலில் நிறுத்தமுறை. |
2. கிழவர் - திணைக்குரிய தலைமக்கள் |
3. அஃது-வேட்டுவர் என்பது. |