பக்கம் எண் :

174தொல்காப்பியம் - உரைவளம்

பெயருடையார்  மேல்  தொழிற்  பெயராகி  வந்தது.4 “வந்தது  கொண்டு  வாராதது முடித்தல்” (மரபு - 112)
என்பதனான்5   ஆய்ச்சியர்    எனவும்    கொள்க.    அவ்விருத்திறத்தாரும்6   காடு   பற்றி  வாழ்தலின்
அந்நிலத்தின்   மக்களாயினார்.   அவ்வயின்   வரூஉம்   கிழவர்   இருவகையர்.   அந்நிலத்தை   ஆட்சி
பெற்றோரும்,   அந்நிலத்து   உள்ளோரும்  என.  ‘குறும்பொறை நாடன்’  என்பது போல்வன ஆட்சி பற்றி
வரும். ‘பொதுவன், ஆயன், என்பன குலம் பற்றி வரும்.*     

  (23)

நச்சினார்க்கினியர்
  

23. ஆயர் வேட்டுவ.................முளரே
  

இது   முன்னர்த்   திணைதொறுமரீஇய  பெயருடையோரிலுந்திணை  நிலைப்பெயராகிய  தலைமக்களாய்
வழங்குவாரும் உளரென முல்லைக்குங் குறிஞ்சிக்கும் எய்தாததெய்துவித்தது.
  

இதன்  பொருள்:  ஆடூஉத்  திணைப்பெயர்  -  முற்கூறிய  ஆண்  மக்களாகிய  திணைதொறு மரீஇய
பெயர்களுள்,  ஆயர்  வேட்டுவர்  வரூஉங்  கிழவரும்  உளர் - ஆயரிலும் வேட்டுவரிலும் வருங் கிழவரும்
உளர், ஆவயின் - அவ்விடத்து வருந் தலைவியரும் உளர் என்றவாறு.
  

ஆயர்    வேட்டுவரென்னும்   இரண்டு   பெயரே   எடுத்தோதினாரேனும்   ஒன்றென   முடித்தலான்
அந்நிலங்கட்கு உரிய ஏனைப் பெயர்களான் வருவனவுங் கொள்க1


4. எயினர் பாலை நிலப்பெயர் இவர் கூறியது தவறு.
  

5. வந்தது ஆண்பாற் பெயர்; வாராதது பெண்பாற் பெயர்
  

6. நிலப்  பெயர்,  தொழிற் பெயர் உடையார். ஆயர் நிலப்பெயர் என்பதும் வேட்டுவர் தொழிற் பெயர்
என்பதும் இவர் கருத்து.
  

* இச்சூத்திரம்  முல்லை  நிலம்  பற்றியது என்பது இளம் பூரணர் கருத்து. நச்சினார்க்கினியர் முல்லை
குறிஞ்சி நிலங்கள் பற்றியது என்பர்
  

1. முன் சூத்திரத்தில் இவர் காட்டிய உதாரணங்களிற் காண்க.