“தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரு முல்லையுந் தாய பாட்டங்காற் றோழிநம் புல்லினத் தாயர் மகளிரோ டெல்லா மொருங்கு விளையாட வவ்வழி வந்த குறுந்தம்பூங் கண்ணிப் பொதுவன் மற் றென்னை முற்றிழை யேஎர் மடநல்லாய் நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றா னெல்லாநீ பெற்றேம்யா மென்று பிறர்செய்த வில்லிருப்பாய் கற்ற திலைமன்ற காணென்றேன் முற்றிழாய் தாதுசூழ் கூந்தற் றகைபெறத் தைஇய கோதை புனைகோ நினைக்கென்றா னெல்லாநீ யேதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப் பேதையை மன்ற பெரிதென்றேன் மாதரா யைய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேற் றொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர் செய்புற நோக்கி யிருத்துமோ நீபெரிது மையலை மாதோ விடுகென்றேன் றையலாய் சொல்லிய வாறெல்லா மாறுமா றியான்பெயர்ப்ப வல்லாந்தான் போலப் பெயர்ந்தா வைனைநீ யாயர் மகளி ரியல்புரைத் தெந்தையும் யாயு மறிய வுரைத்தீயின் யானுற்ற நோயுங் களைகுவை மன்” |
(கலி-111)
|
“ஆயர் மகனையுங் காதலை கைம்மிக ஞாயையு மஞ்சுதி யாயி னரிதரோ நீயுற்ற நோய்க்கு மருந்து” |
(கலி-107)
|
“தோழிநாம் காணாமை யுண்ட கடுங்கள்ளை மெய்கூர நாணாது சென்று நடுங்க வுரைத்தாங்குக் கரந்ததூஉங் கையொடு கோட்பட்டாங் கண்டாய்நம் புல்லினத் தாயர் மகன். |
(கலி-115)
|
என்றாற் போல்வன பிறவும் வருவன கொள்க2 |
|
2. பொதுவன் என்பது முல்லை நிலத்தலைமகன் பெயர் ஆயர் மகன் ஆயர் மகள் என்பன ஆயர் என்னும் முல்லை நிலமக்களின் பெயரிலிருந்து வந்த தலை மக்கள் பெயர். இதுபற்றிச் சிவலிங்கனார் விளக்கம் பார்க்க. |