பக்கம் எண் :

176தொல்காப்பியம் - உரைவளம்

இன்னும்     ‘ஏனலு  மிறங்குகதி  ரிறுத்தன’  என்னும்  அகப்பாட்டினுள்  ‘வானிணப்  புகவிற் கானவர்
தங்கை’   எனவும்   ‘மெய்யீற்றீரா’   என்பதனுள்  ‘வேட்டுவற்  பெறலோடமைந்தனை' எனவும் வருவனவும்
பிறவுங் கொள்க. வேட்டு என்னுந் தொழிலுடையானை வேட்டுவனென்றலிற் குறிப்பு வினைப்பெயர்.
  

“குன்றக் குறவன் காதன் மடமகள்
வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி
வளையன் முளைவா ளெயிற்ற
ளிளைய ளாயினு மாரணங் கினளே.”  
  

  (ஐங்குறு-256)

இது    வருத்தும்  பருவத்தளல்லள்  என்ற  தோழிக்குக்  கூறியது. இப்பத்தினுள் ‘குறவன்...................மகள்’
எனக்  கூறுவன   பல   பாட்டுக்கள்  உள;  அவையுங் கொள்க. இவ்வாற்றான் இந்நிலத்து மக்கள் பெயரும்
பெற்றாம். ஏனைய பெயர்களில் வந்த னவுளவேற் கொள்க.
  

பாரதியார்
  

23. ஆயர்....................உளரே
  

கருத்து:-   இது   மேற்சூத்திரத்திற்  கூறிய  திணை  நிலைப்பெயர்  வகைகளும்  அப்பெயருடையாரின்
அகத்திணைக்குரிமையுங் விளக்குகிறது.
  

பொருள்:-     ஆயர் வேட்டுவர்  ஆடூஉத்திணைப் பெயர் - ஆயர் வேட்டுவர் என்பன ஆண்பால்
சுட்டும்   முல்லை    நில    மக்களின்    திணைநிலப்   பெயர்களாம்;   ஆவயின்   வரூஉம்  கிழவரும்
உளரே-அந்நிலத்து அகத்திணைக்குரிமை கொள்பவரும் உளராம்.
  

குறிப்பு:- ஈற்றேகாரம் அசைநிலை.
  

ஆயர்   என்பது  முல்லை  நில மக்களுக்குத் திணைப் பெயராகும் அதுவேபோல், வேட்டுவர் என்பதும்
முல்லை     நில    மக்கட்    பெயரென்று    இளம்பூரணரும்,   குறிஞ்சி   நில   மக்கட்   பெயரென்று
நச்சினார்க்கினியரும்  கூறுவர்.  இவருள்  இளம்பூரணர்  கூற்றுப்பொருட்  சிறப்புடையது  “மாயோன் மேய”
என்னும் முன் 5 ஆஞ் சூத்திரத்தில் திணை நிலங்களில் முதலில் வைத்தெண்ணிய