பக்கம் எண் :

178தொல்காப்பியம் - உரைவளம்

யாருக்கும்    விலக்கில்லையென்பது  தெற்றென  விளங்கும்  “நெல்லும்  உப்பும் நேரே யூரீர், கொள்ளீரோ
வெனச்சேரி   தோறும்”   உப்புச்   சுமந்து   விற்றுத்  திரியும் உமண்மகளைத் தலைவியாக்கி, அம்மூவனார்
கூறிய அகம் 390-ஆம் பாட்டு இவ்வுண்மையை வலியுறுத்தும்.
  

“-  -  -  -  -  சாரற்  சிறுகுடிக்  குறவன்  பெருந்தோட் குறுமகளைத்” தலைவியாக்கும் “மால்வரை”
என்னும் கபிலர் குறும்பாட்டும், (குறுந்-95)
  

“வரையகச்    சிறுதினைச்    செவ்வாய்ப்   பாசினம்   கடியும்   கொடிச்சி”யைத்   தலைமகளாக்கும்
நற்றிணை-134-ஆம் பாட்டும்,
  

இன்னும்   இதுவேபோல்   பல  பழம்  பாட்டுகளும்  பிறப்பாற்  சிறப்பெதுமில்லாத  ஆயர்,  குறவர்,
நுளையர் முதலிய யாரும் காதற்றலை மக்களாதற்குரியர் என்பதைத் தெளிவாக்கும்:-
  

1.“பாங்கரும் பாட்டங்காற் கன்றொடு செல்வோம்எம்
தாம்பி னொருதலை பற்றினை, ஈங்கெம்மை
முன்னைநின் றாங்கே விலக்கிய எல்லா !நீ
என்ஏ முற்றாய்? விடு.
விடேன், தொடீஇய செல்வார்த் துமித்தெதிர் மண்டும்
கருவய நாகுபோ னோக்கிக் கொடுமையா
னீங்கிச் சினவுவாய் மற்று
.... .... ..... ..... ..... ..... ..... ..... ..... .... ... ....
கலத்தொடியாஞ் செல்வுழி நாடிப் புலத்தும்
வருவையா னானிலை நீ.

  (முல்லைக்கலி-16)
 

2. கடிகொள் ளிருங்காப்பிற் புல்லினத் தாயார்
குடிதொறும் நல்லாரை வேண்டுதி எல்லா!
இடுதேள் மருந்தோ நின் வேட்கை? தொடுதரத்
துன்னித்தந் தாங்கே நகைகுறித் தெம்மைத்
திளைத்தற் கெளியமாக் கண்டை, அளைக்கெளியள்
வெண்ணெய்க்கும் அன்னளெனக் கொண்டாய்;
ஆங்குநீ கூறி னனைத்தாக; நீங்குக. (ஒண்ணுதால்!)

.... .... ..... ..... ..... ..... ..... ..... ..... .... ... ....

நின்றாய் நீ சென்றி, எமர் காண்பர்; நாளைஎங்
கன்றொடு சேறும் புலத்து.  

(முல்லைக்கலி-10)