3. யாரிவன் என்னை விலக்குவான்? நீருளர் பூந்தா மரைப்போது தந்த விரவுத்தார்க் கல்லாப் பொதுவனை! நீமாறு, நின்னொடு சொல்லல் ஒம்பென்றார் எமர்.” |
(முல்லைக்கலி-12) |
இவற்றால் முல்லை நிலத்தில் ஆயர் அகவொழுக்கத்தலை மக்களாதற் குரியரென்பது தெளிவு. |
“சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக் கொலைவில் எயினர் தங்கை நின்முலைய சுணங்கென நினைதி நீயே; அணங்கென நினையுமென் னணங்குறு நெஞ்சே” |
(ஐங்குறு-363) |
என்னும் ஐங்குறு நூற்றுப்பாட்டால், முல்லை நிலத்தில் வேட்டுவத் தொழிலுடைய எயினர் தங்கை தலைமகளாதலறிக. |
இனி, “என்னுள் வருதியோ நன்னடைக்கொடிச்சி” என்னும் நற்றிணை 82-ஆம் பாட்டில் வரும் அம்மள்ளனார் செய்யுளடியும், |
“உறுகழை நிவப்பிற் சிறுகுடிப் பெயரும் கொடிச்சி செல்புறம் நோக்கி விடுத்த நெஞ்சம் விடலொல் லாதே” |
என்னும் நற்றிணை 204-ஆம் பாட்டில் மள்ளனார் கூறும் அடிகளும் குறிஞ்சிக்குறத்தி தலைமகளாதற்கு மேற்கோள். அவ்வாறே. |
“மீனெறி பரதவர் மடமகள் மானமர் நோக்கங் காணாவூங்கே.” |
என்னும் வெள்ளியந்தின்னனார் நற்றிணை 101-ஆம் பாட்டடிகளும், |
|
“முடிமுதிர் பரதவர் மடமொழிக் குறுமகள் ... ... ... ... ... ... ... ... ... .. ... கொலை வெஞ் சிறாஅர் பாற்பட் டனளே”. |
என்னும் நற்றிணை 207-ஆம் பாட்டடிகளும் |
நெய்தற் பரத்தி தலை மகளாதற்கு மேற்கோளாம். |