கார்செய் தன்றே கவின்பெறு கானம் குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப் பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன் கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தள் போதவிழ் அலரின் நாறும் ஆய்தொடி அரிவைநின் மாணலம் படர்ந்தே”. |
(அகம்-4) |
இதனுள், முல்லைக்கு உரித்தாகிய நிலமும் காலமும் கருப்பொருளும், இருத்தலாகிய உரிப்பொருளும் வந்தவாறு கண்டு கொள்க.3 |
“இல்லொடு மிடைந்த கொல்லை முல்லைப் பல்லான் கோவலர் பையுள் ஆம்பல் புலம்புகொள் மாலை கேட்டொறும் கலங்குங்கொல் அளியற்றாங் காதலோளே.” |
என்பதும் அது.4 |
“திருநகர் விளங்கு மாசில் கற்பின் அரிமதர் மழைக்கண் மாஅ யோளொடு நின்னுடைக் கேண்மை யென்னோ முல்லை இரும்பல் கூந்தல் நாற்றமும் முருந்தேர் வெண்பல் ஒளியுநீ பெறவே”. |
|
3. கவின் பெறுகானம் நிலம்; கார்செய்தன்று பொழுது முல்லை கருப்பொருள் ‘மாண் வினைத் தேரன் குறும்பொறை நாடன் நின் நலம் படர்ந்து தோன்றும் உவக்காண்’ என்பது உரிப்பொருள். |
4. இல்லொடு மிடைந்த கொல்லை - நிலம். முல்லை - கருப்பொருள், மாலை பொழுது காதலோள் கலங்குவள் கொல் - உரிப்பொருள் |