பக்கம் எண் :

184தொல்காப்பியம் - உரைவளம்

இது, முதற்பொருள் வாராது கருப்பொருளானும் உரிப்பொருளானும் முல்லையாயினவாறு.5
  

“கரந்தை விரைஇய தண்ணறுங் கண்ணி
இளையர்ஏல் இயங்குபரி கடைஇப்
பகைமுனை வலிக்குந் தேரொடு
வினைமுடித் தனர்நங் காத லோரே.”

  

இது, முதலும் கருவும் இன்றி உரிப்பொருளான் முல்லையாயிற்று6.
  

“கதிர்கை யாக வாங்கி ஞாயிறு 
பைதறத் தெறுதலின் பயங்கரந்து மாறி
விடுவாய்ப் பட்ட வியங்கண் மாநிலம்
காடுகவின் எதிரக் கனைபெயல் பொழிதலின்
பொறிவரி யினவண் டார்ப்பப் பலவுடன்
நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற
வெறியேன் றன்றே வீகமழ் கானம்
எவன்கொல் மற்றவர் நிலையென மயங்கி
இகுபனி உறைகுங் கண்ணோ டினைபாங்கு
இன்னாது உறைவி தொன்னலம் பெறூஉம்
இதுநற் காலம் காண்டிசின் பகைவர்
மதில்முகம் முருக்கிய தொடிசிதை மருப்பிற்
கந்துகால் ஒசிக்கும் யானை
வெஞ்சின வேந்தன் வினைவிடப் பெறினே.”
  

(அகம்-164)
  

இது, பிரிதற் பகுதியாகிய பாசறைப் புலம்பல் எனினும் நிலம் பற்றி முல்லையாயிற்று.7
  


5. முல்லை-கருப்பொருள்.   ‘கற்பின்   மாயோளொடு  நின்கேண்மை  என்னோ’  -  உரிப்பொருள்  -
கற்பாவது ஆற்றியிருத்தல்
  

6. நம் காதலர் வினை முடித்தனர்; வருவர் அதுவரை ஆற்றுக என்பது உரிப்பொருள்.
  

7. பாசறையில்  தலைவன்  தலைவியை  நினைந்து ‘வேந்தன்  வினை  நிகழ்ந்து முற்றுப்பெறின் இக்காலம்
துன்பத்தோடு   உறையும்  தலைவியின்  துயர்  துடைத்தற்குரியதாகும்;  அது  நிகழவில்லையே  எனப்
புலம்புதல் பாலை. கனைபெயல் பொழிதலின்... வெறியேன்றன்று கானம்’ என்பது காடு பற்றியது.