“மலிதிரை யூர்ந்துதண் மண்கடல் வௌவலின்” (கலிமுல்லை 4) என்னும் முல்லைக்கலி, புணர்தற் பொருண்மைத்தாயினும் முல்லைக்குரிய கருப்பொருளான் வருதலின் முல்லையாயிற்று. பிறவும் அன்ன. |
குறிஞ்சித் திணைக்குச் செய்யுள் |
“விடிந்த ஞாலம் கவின்பெறத் தலைஇ இடிந்த வாய எவ்வங் கூர நிலமலி தண்துளி தவிராது புலந்தாய் நீர்மலி கடாஅம் செருக்கிக் கார்மலைந்து கனைபெயல் பொழிந்த நள்என் யாமத்து மண்புரை மாசுணம் விலங்கிய நெறிய மலைஇ மணந்த மயங்கரி லாரலிற் நிலைபொலிந் திலங்கு வைவே லேந்தி இரும்பிடி புணர்ந்த செம்மல் பலவுடன் பெருங்களிற்றுத் தொழுதியோ டெண்குநிரை இரிய நிரம்பா நெடுவரை தத்திக் குரம்பமைந்து ஈண்டுபயில் எறும்பின் இழிதரும் அருவிக் குண்டுநீர் மறுசுழி நீந்தி ஒண்தொடி அலமரல் மழைக்கண் நல்லோள் பண்புநயந்து சுரன்முத லாரிடை நீந்தித் தந்தை வளமனை ஒருசிறை நின்றனே மாகத் தலைமனைப் படலைத் தண்கமழ் நறுந் தாது ஊதுவண் டிமிரிசை யுணர்ந்தனள் சீறடி அரிச்சிலம் படக்கிச் சேக்கையின் இயலிச் செறிநினை நல்லில் எறிகத வுயவிக் காவலர் மடிபத நோக்கி ஓவியர் பொறிசெய் பாவையி னறிவுதளர் பொல்கி அளக்க ரன்ன வாரிருள் துமிய |
விளக்குநிமிர் பனைய மின்னிப் பாம்பு படவரைச் சிமையக் கழலுறு மேறோ டிணைப்பெய லின்னலங் கங்குலும் வருபவோவென்றுதன் மெல்விரல் சேப்ப நொடியின ணல்யாழ் வடிவுறு நரம்பிற் றீவிய மிழற்றித் திருகுபு முயங்கி யோளே வென்வேற் களிறுகெழு தானைக் கழறொடி மலையன் |