பக்கம் எண் :

186தொல்காப்பியம் - உரைவளம்

ஒளிறுநீ ரடுக்கங் கவைஇய காந்தள்
மணங்கமழ் முள்ளூர் மீமிசை
அணங்குகடி கொண்ட மலரினுங் கமழ்ந்தே.”

  

இது, முதலும் கருவும் புணர்தலாகிய உரிப்பொருளும் வந்த குறிஞ்சிப்பாட்டு.8
  

“நறைபடர் சாந்தம் அறவெறிந்து நாளால்
உறையெதிர்ந்து வித்திய ஊழ் எனற் - பிறையெதிர்ந்து
தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ
ஏமரை போந்தன வீண்டு.” 
  

  (திணைமாலை நூற்-1)

இது    முதற்பொருள்    இன்றிக்    கருப்பொருளும்,   உரிப்பொருளும்   வந்தமையாற்   குறிஞ்சித்
திணையாயிற்று.9
  

“முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
மலையன் ஒள்வேற் கண்ணி
முலையும் வாரா முதுக்குறைந் தனளே.”

  

இஃது உரிப்பொருள ஒன்றுமே வந்த குறிஞ்சிப்பாட்டு.10
  

“பருவ மென்தினை பாலும் பெய்தன
கருவிரற் கிள்ளை கடியவும் போகா
பசுமூ தந்திக் கடைவன வாடப்
பாசிப் பக்கப் பனிநீர்ப் பைஞ்சுனை
விரியிதழ்க் குவளை போல வில்லிட்டு
எரிசுடர் விசும்பின் ஏறெழுந்து முழங்கக்
  


8. கனைபெயல் பொழிந்த நள்ளென்யாமம் என்றதால் கூதிரும் யாமமுமாகிய பொழுது முதற் பொருள்
வன  மலை  நில  முதற்  பொருள்  கருவி  எண்கு (கரடி) கருப்பொருள் ‘தீவியமிழற்றி முயங்கியோள்’
என்பது புணர்தல் உரிப்பொருள்.
  

9. சாந்தம்  ஏனல்  கருப்பொருள்  அம்பு  பாய்ந்த  மரை (மான் ஈண்டு போந்தன காணீரோ என்பது
புணர்தல் நிமித்தமான கெடுதி வினாதல் என்னும் உரிப்பொருள்
  

10. தலைவி பருவம் வாய்ந்தவள் எனும் புணர்தல் நிமித்தமான உரிப்பொருள்.