குன்றுபனி கொள்ளுஞ் சாரல் இன்றுகொல் தோழி அவர்சென்ற நாட்டே.” |
இஃது இருத்தற் பொருண்மைக்கண் வந்ததேனும், முதற்பொருளானும் கருப்பொருளானும் குறிஞ்சியாயிற்று.11 |
“வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க் கோடாது நீர்கொடுப்பி னல்லது - கோடா எழிலு முலையும் இரண்டிற்கு முந்நீர்ப் பொழிலும் விலையாமோ போந்து.” |
(திணைமாலைநூற்-15) |
இது கற்பிற் புணர்வு; பொருளாற் குறிஞ்சியாயிற்று12. |
“படாஅ தோழி யெங்கண்ணே கொடுவரி கொன்முரண் யானை கனவு நன்மலை நாடன் நசையி னானே.” |
இஃது இரங்கற்பொருண்மையேனும் முதற்பொருளானும் கருப்பொருளானும் குறிஞ்சியாயிற்று13. பிறவும் அன்ன. |
பாலைத்திணைக்குச் செய்யுள். |
“அறியாய் வாழி தோழி இருளற விசும்புடன் விளக்கும் விரைசெலல் திகிரிக் கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய |
|
11. ‘அவர் சென்ற நாட்டில் குன்றுபனி படரும் சாரல் இன்று சொல் எனத்தலைவி கூறி ஆற்றியிருப்பது முல்லை யுரிப்பொருள். குன்று சாரல் குறிஞ்சி முதற்பொருள்.தினை, கிளி சுனை குறிஞ்சிக் கருப்பொருள். |
12. தோழி அறத்தொடு நின்றது, தலைவியைத் தலைவனுக்கு மணம் செய்து கொடுக்க எனக்களவை வெளிப்படுத்தலின் களவொழுக்கத்தின் பாற்பட்டதாயினும் கற்பாகும். களவுவெளிப்பாடே கற்பாகும் ஆதலின், பொருள் என்ற அறத்தொடு நிற்றலாகிய உரிப்பொருள். |
13. ‘மலைநாடனை விரும்பியதால் என் கண்கள் துயிலா’ எனத்தலைவி கூறியிரங்குதலின் நெய்தற்குரிய இரங்கல் உரிப்பொருளாயினும் புலி யானைகளால் கருப்பொருளும் மலைநாடன் என்பதால் நில முதற்பொருளும் வந்தனவாம். |