இவ்வைங்குறுநூறு உடன் போகின்றான் நலம்பாராட்டிய கூற்றாம்2. |
“முளவுமா வல்சி யெயினர் தங்கை யிளமா வெயிற்றிக்கு நின்னிலை யறியச் சொல்லினே னிரக்கு மளவை வென்வேல் விடலை விரையா தீமே”. |
(ஐங்குறு-364) |
இவ் வைங்குறுநூறு கொண்டுடன் போங் காலத்திற்குக் கொண்டுடன் போக்கு ஒருப்படுத்துவ லென்றது. |
“கணமா தொலைச்சித் தன்னையர் தந்த நிணவூன் வல்சிப் படுபுள் ளோப்பு நலமா ணெயிற்றி போலப் பலமிக நன்னல நயவர வுடையை யென்னோற் றனையோ மாவீன் றளிரே.” |
(ஐங்குறு 365) |
இவ் வைங்குறுநூறு வரைவிடை வைத்துப் போகின்றான் மாவினை நோக்கிக் கூறியது. ஏனைப்பெயர்க்கண் வருவன வந்துழிக் காண்க. |
“முற்றா மஞ்சட் பசும்புறங் கடுப்பச் சுற்றிய பிணர சூழ்கழி யிறவின் கணங்கொள் குப்பை யுணங்குதிற நோக்கிப் புன்னையங் கொழுநிழன் முன்னுய்த்துப் பரப்புந் துறைநனி யிருந்த பாக்கமு முறைநனி யினிதும னளிதோ தானே துனிதுறந் தகன்ற வல்கு லைதமை நுசுப்பின் மீனெறி பரதவர் மடமகண்3 மானேர் தோக்கங் காணா வூங்கே” |
(நற்றிணை 101) |
|
2. எயினன் எயிற்றி எனப்பாலைத் திணை நிலைப்பெயர்கள் வந்தன. |
3. பரதவர் மடமகள் திணை நிலைப்பெயர் (நெய்தல்) |