பக்கம் எண் :

ஏனோர் மருங்கினும் எண்ணுங் காலை சூ 24195

இது வரைதற் பொருட்டுத் தலைவி வேறுபாட்டிற்கு ஆற்றாத தோழி சிறைப்புறமாகக் கூறியது.
  

“அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லைக்
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே
யிதற்கிது மாண்ட தென்னா ததற்பட்
டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்ச
மயிற்க ணன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
3
கண்வலைப் படூஉங் கான லானே.” 
  

  (குறுந்-184)
 

இது கழறிய பாங்கற்குக் கூறியது.
  

“கடுந்தே ரேறியுங் காலிற் சென்றுங்
என்னினை யுங்கொல் பரதவர்மகளே.”

  

(நற்றிணை-349)
 
இது நற்றிணை.
 

‘இவளே,     கான  ணண்ணிய’  என்னும் நற்றிணைப் பாட்டினுள், ‘கடுந்தேர்ச் செல்வன் காதன் மகனே’
என்றது   அருமை   செய்தயர்த்தலின்   அவனை  இகழ்ச்சிக்குறிப்பால்  தலைமையாகக் கூறினாள். ஏனைப்
பெண் பெயர்க்கண்4 வருவனவும் வந்துழிக் காண்க.
  

‘ஏனோர்  பாங்கினும்’  எனப்  பொதுப்படக்கூறிய  அதனான்  மருத  நிலத்து  மக்களுள் தலைமக்கள்
உளராகப் புலனெறி வழக்கஞ் செய்த செய்யுட்கள் வந்தன உளவேற் கண்டு கொள்க.5  


3. பரதவர் மடமகள் - நெய்தல் திணைநிலைப்பெயர்
  

4. நுளைச்சியர் போல்வன.
  

5. இதனால்தான்  உரையில்  ஏனோர்  என்பதற்கு மருதத்தை விட்டுப் பாலை நெய்தல் என இரண்டே
கூறினார்.