(1) குறிஞ்சிநில மக்கள் தலைமக்களாதற்கு |
(அ) “யானை யுழலு மணிகிழர் நீள்வரைக் கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்; எனலு ளைய வரவுமற் றென்னைக்கொல்? காணினுங் காய்வ ரெமர்.” |
(திணைமொழி-6) |
இதில், கானக்குறத்தி தலைவியாவதைக் காண்பாம். |
(ஆ) “குன்றக் குறவன் காதல் மடமகள்” |
(ஐங்குறு-256) |
எனுங் கபிலர் குறுநூற்றடியுமது. |
குறத்தியர் தலைமகளிராகச் சுட்டும் பிற பாட்டுக்களை மேலே குறித்தோம். |
எனும் குறும்பாட்டில் நுண்வலைப் பரதவர் மடமகள் தலை மகளாதலறிக. |
இன்னும் |
(ஆ) “பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணா திருங்கடன் மூழ்குவார் தங்கை-இருங்கடலுன் முத்தன்ன வெண்முறுவல் கண்டுருகி நைவார்க்கே ஒத்தனம் யாமே யுளம்” |
(திணைமாலை நூற்றைம்பது-33) |
எனும் திணைமாலை வெண்பாவிலும் சங்கு குளிப்பாரின் தங்கை தலைமகளாவதறிக. |
(3) (அ) மருதநில மக்கள் தலைவராதலை, |
(அ) “தொண்டி யன்ன என்னலந் தந்து கொண்டனை சென்மோ மகிழ்ந நின்சூளே.” |
(குறுந்-238) |
எனுங்குன்றியன் குறும்பாட்டிற் காண்க. |
|
அன்றியும் |
(ஆ) மேகந்தோய் சாந்தம் விசைதிமிசு காமகி னாகந்தோய் நாக மெனவிவற்றைப்-போக எறிந்துழுவார் தங்கை யிருந்தடங்கண் கண்டு மறிந்துழல்வா னோவிம் மலை” |
(28 திணைமாலை-150) |