பக்கம் எண் :

198தொல்காப்பியம் - உரைவளம்

எனும் வெண்பாவில் நிலந்திருத்தி உழுவாரின் பெண் தலை மகளாதலறிக.
  

25. 
  

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்1
கடிவரை யிலபுறத்து என்மனார் புலவர்
(25)

  

ஆ.மொ.இல.
  

the scholars say that having heroes among servents
and officials is not prevented in literature dealing
with ‘Puram’ (matter other than true love).
  

இளம்பூரணர்

25. அடியோர் பாங்கினும்....................புலவர்
  

இது    நடுவணைந்    திணைக்குரிய   தலைமக்களைக்   கூறி   அதன்   புறத்தவாகிய   கைக்கிளை
பெருந்திணைக்குரிய மக்களை உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)  அடியோர்  பாங்கினும்  வினைவலர் பாங்கினும் - அடித்தொழில செய்வார் பக்கத்தினும் வினை
செய்வார்   பக்கத்தினும்,   கடிவரைஇல   கடிந்து   நீக்கும்   நிலைமையில்லை,  புறத்து என்மனார் புலவர் -
ஐந்திணைப்  புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைக் கண் என்று சொல்வர் புலவர்.
  

‘புணர்தல்     முதலான  பொருள்’  என்பது  அதிகாரத்தான்  வந்தது. ‘வினை செய்வார்’ என்பதனால்
அடியரல்லாதார்   என்பது   கொள்க.   அகத்திணைக்கு   உரியரல்லரோ  வெனின்,  அகத்திணையாவன
அறத்தின்    வழாமலும்    பொருளின்    வழாமலும்    இன்பத்தின்   வழாமலும்   இயலல்  வேண்டும்;
அவையெல்லாம்     பிறர்க்கு     குற்றேவல்     செய்வார்க்குச்    செய்தல்    அரிதாகலானும்,   அவர்
நாணுக்குறைபாடுடைய   ராகலானும்,   குறிப்பறியாது   வேட்கை  வழியே சாரக் கருதுவராகலானும், இன்பம்
இனிது  


1. வினைவல பாங்கினும் - நச். பாடம்.