10 | தொல்காப்பியம் - உரைவளம் |
நிறுத்த முறையானே பொருளினது இலக்கணம் உணர்த்தினமையின், இது பொருளதிகாரமென்றும் பெயர்த்தாயிற்று. இது நாண் மீனின் பெயர் நாளிற்குப் பெயராயினாற் போல்வதோர் ஆகுபெயர்1. | பொருளாவன:- அறம் பொருளின்பமும், அவற்றது நிலையின்மையும், அவற்றினீங்கிய வீடு பேறுமாம். பொருளெனப் பொதுப்படக் கூறவே, அவற்றின் பகுதியாகிய முதல் கருஉரியும், காட்சிப்பொருளும், கருத்துப்பொருளும் அவற்றின் பகுதியாகிய ஐம்பெரும் பூதமும் அவற்றின் பகுதியாகிய இயங்குதிணையும் நிலைத்திணையும், பிறவும் பொருளாம். | எழுத்துஞ் சொல்லும் உணர்த்தி, அச்சொற்றொடர் கருவியாக உணரும் பொருள் உணர்த்தலின், மேலதிகாரத்தோடு இயைபுடைத்தாயிற்று. அகத்திணைக்கண் இன்பமும், புறத்திணைக்கண் ஒழிந்த மூன்று பொருளும் உணர்த்துப. இது வழக்கு நூலாதலிற் 2பெரும்பான்மையும் நால்வகை வருணத்தார்க்கும் உரிய இல்லறம் உணர்த்திப் பின் துறவறமுஞ் சிறுபான்மை கூறுப. அப்பொருள்கள் இவ்வதிகாரத்துட் காண்க. பிரிதனிமித்தங் கூறவே, இன்ப நிலையின்மையுங் கூறிக் ‘காமஞ்சான்ற’ என்னுங் கற்பியற் சூத்திரத்தால் (192) துறவறமுங் கூறினார். வெட்சிமுதலா வாகையீறாக அறனும் பொருளும் பயக்கும் அரசியல் கூறி, அவற்றது நிலையின்மை காஞ்சியுட் கூறவே, அறனும் பொருளும் அவற்றது நிலையின்மையுங் கூறினார், ‘அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்’ என்னுஞ் சூத்திரத்தான் (75) இல்லறமும் துறவறமுங் கூறினார். இங்ஙனம் இந்நிலையாமையானும் பிறவற்றானும் வீட்டிற்குக் காரணங் கூறினார். இங்ஙனம் கூறவே, இவ்வாசிரியர் பெரிதும் பயன் றருவதோர் இலக்கணமே கூறினாராயிற்று; இதனாற் |
1. கார்த்திகை எனும் நாண்மீனின் பெயர் அது இயங்கும் கால எல்லைக்கும் கார்த்திகை நாள் எனப்பெயரானாற் போல பொருளின் இலக்கணம் அதை உணர்த்தும் பகுதிக்கு ஆயிற்று. 2. வழக்கு நூல்-உலக நடைமுறை வழக்கைக் கூறும் நூல். |
|
|