பக்கம் எண் :

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் சூ.25199

நடத்துவார்   பிறரேவல்   செய்யாதார்   என்பதனானும்  இவர்  புறப்பொருட்குரியராயினார் என்க எனவே,
இவ்வெழுவகைத்திணையும் அகம் புறம் என இருவகையாயின.
  

“என்றோற் றனைகொல்லோ.
நீருள் நிழல்போல் நுடங்கிய மென்சாயல்
ஈங்குருச் சுருங்கி
இயலுவாய் நின்னொடு உசாவுவென் நின்றீத்தை;

  

அன்னையோ, காண்டகை இல்லாக் குறள்நாழிப் போழ்தினான்
 

ஆண்டலைக் கீன்ற பறழ்மகனே நீயெம்மை
வேண்டுவல் என்று விலக்கினை நின்போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று;

  

மாண்ட எறித்த படைபோல் முடங்கி மடங்கி
 

நெறித்துவிட் டன்ன நிறையோரால் என்னைப்
பொறுக்கல்லா நோய்செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன்
நீநல்கின் உண்டென் னுயிர்;

  

குறிப்புக்காண்    வல்லுப் பலகை யெடுத்து நிறுத்தன்ன
கல்லாக் குறள கடும்பகல் வந்தெம்மை
இல்லத்து வாவென மெய்கொளீஇ எல்லாநின்
பெண்டிர் உளர்மன்னோ கூறு;
  

நல்லாய்கேள்     உலகத்து மேலு நடுவுயர்ந்து வாள்வாய
கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான்
புக்ககலம் புல்லின் நெஞ்சூன்றும் புறம்புல்லின்
அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன் அருளீமோ
பக்கத்துப் புல்லச்சிறிது:
  

போசீத்தை      மக்கண் முரியேநீ மாறினித் தொக்க
மரக் கோட்டஞ் சேர்ந்தெழுந்த பூங்கொடிபோல
நிரப்பமில் யாக்கை தழீஇயின ரெம்மைப்
புரப்பே மென் பாரும் பலராற் பரத்தையன்
பக்கத்துப் புல்லீமா யென்னுமாற் றொக்க
உழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னின்
இழிந்ததோ கூனின் பிறப்பு: