கழிந்தாங்கே, யாம்வீழ்து மென்றுதன் பின்செலவு முற்றீயாக் கூனி குழையுங் குழைவுகாண்; |
யாமை, எடுத்து நிறுத்தற்றாற் றோளிரண்டும் வீசி, யாம்வேண்டே மென்று விலக்கவு மெம்வீழுங் காமர் நடக்கு நடைகாண் கவர்கணைச் சாமனார் தம்முன் செலவு காண்க. |
ஒ ஒகாண், நம்மு ணகுதற் றொடீஇயர் நம்முணாம் உசாவுவங் கோனடிதொட் டேன்; |
ஆங்காக சாயலின் மார்ப அடங்கினேன் ஏ ஏ பேயம் பேயும் துள்ள லுறுமெனக் கோயிலுட் கண்டார் நகாஅமை வேண்டுவல் தண்டாத் தகடுருவ வேறாகக் காவின்கீழ் போதர் அகடாரப் புல்லி முயங்குவேம் துகடீர்பு காட்சி அவையத்தார் ஓலை முகடுகாப்பு யாத்துவிட் டாங்கு.” |
(கலி-மரு-29) |
இதனுள் ஒருவரையொருவர் இழித்துக் கூறினமையான் அடியார் என்பதூஉம் மிக்க காமத்தின்1 வேறுபட்டு வருதலாற் பெருந்திணைப்பாற்படும் என்பதூஉம் கண்டுகொள்க. இது தானே கைக்கிளைக்கும் உதாரணமாம். வினைவலர்மாட்டு வருவன வந்தவழிக் கண்டுகொள்க. |
(55)
|
நச்சினார்க்கினியர் |
25. அடியோர் பாங்கினும்...............புலவர். |
இது, மேல் நால்வகை நிலத்து மக்களுந் தலைமக்களாகப் பெறுவரென்றார், அவரேயன்றி இவருந் தலைமக்களாகுப கைக்கிளை பெருந்திணைக்க ணென்கின்றது. |
இதன் பொருள்:- அடியோர் பாங்கினும் - பிறர்க்குக் குற்றறேவல் செய்வோரிடத்தும், வினைவலர் பாங்கினும்-பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்லோரிடத்தும், கடி வரையில் |
|
1. மிக்ககாமம் - மேல்பட்டகாமம். அதவாது ஐந்திணைக் காமம். அதனின் வேறுபட்டு வரும் காமம் பெருந்திணைப்பாற்படும். |