“புனத்துளா னெந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ வினத்துளா னெந்தைக்குக் கலத்தொடு செல்வதோ தினைக்காலுள் யாய்விட்ட கன்றுமேய்க் கிற்பதோ” |
என்றவழி எமரேவலான் யாஞ் செய்வதன்றி யாங்கள் ஏவ நின்னெஞ்சம் இத்தொழில்கள்4 செய்கின்றனவில்லை என்றலின் வினைவல பாங்கினளாய தலைவி கூற்றாயிற்று. |
‘யாரிவன்’ என்னும் முல்லைக்கலியுள், “வழங்காப் பொழுதுநீ கன்றுமேய்ப் பாய்போல் வழங்க லறிவா ருரையாரே லெம்மை யிகந்தாரே யன்றோ வெமர்.” |
(கலி-112) |
இதுவும் வினைவல பாங்கினளாய தலைவியை நோக்கி அத்தலைவன் கூறினது. |
“நலமிக நந்திய” என்னும் முல்லைக்கலியுள், “பல்கால்யாங் கான்யாற் றவிர்மணற் றண்பொழி வல்க லகலறை யாயமொ டாடி முல்லை குருந்தொடு முச்சிவேய்ந் தெல்லை யிரவுற்ற தின்னுங் கழிப்பி யரவுற் றுருமி னதிருங் குரல்போற் பொருமுர ணல்லேறு நாகுட னின்றன பல்லா னினநிரை நாமுடன் செலற்கே”. |
(கலி-113) |
இது தாழ்த்துப் போதற்குத் தலைமையின்றிக் கடிதிற்போகல் வேண்டு மென்றமையானும், நல்லேறும் நாகும் போல நாமுங் கூடப்போகல் வேண்டு மென்றமையானும், தலைவன் வினைவல பாங்கின னாயிற்றென்க. வினைவல்லா னென்னாது |
|
4. புணத்துள்ளானாகிய என் ஐக்கு உணவு கொண்டு கொடுப்பதும் தம் கூட்டத்துள்ள எந்தந்தைக்குக் கலத்தில் உணவு கொண்டு கொடுப்பதும் அன்னை போகவிட்ட கன்றுகளைத் திணைக்கால்களில் மேய்ப்பதும் ஆகிய தொழில்கள். |