பக்கம் எண் :

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் சூ.25203

பாங்கி     னென்றதனால்   தமரேவல்   செய்வது   பெறுதும்,   இஃது   அவ்வந்நிலத்து   இழிந்தோர்க்கு
எஞ்ஞான்றுந்    தொழிலேயாய்    நிகழுமென்றும்,    புனங்காவலும்   படுபுள்ளோப்புதலும்   இவ்வாறன்றி
உயர்ந்தோர்    விளையாட்டாகி    இயற்கைப்    புணர்ச்சிப்    பின்னர்ச்    சின்னாளிற்  றவிர்வரென்றும்
வேறுபாடுணர்க.   இக்கூறிய   இருதிறத்தோருந்5   தமக்குரிய  ரன்மையான் அறம்  பொருளின்பம் வழாமை
நிகழ்த்துதல் அவர்க்கரிதென்பது பற்றி இவற்றை அகப்புறமென்றார்.
  

பாரதியார்
  

25. அடியோர்........................புலவர்
  

கருத்து:-  இஃது,   மேற்கூறியாங்கு   நானில மக்களேயன்றிப் பிற ஏழை மக்களும் அகத்திணைக் குரிமை
கொள்வார் என்று கூறுகிறது.
  

பொருள்:-     புறத்து  மேற்கூறிய  நானிலமக்களின்  திணைபெயர்  வகுப்புக்களிலடங்காத;  அடியோர்
பாங்கினும்   -   பிறர்க்   கடிமையாவாரிடத்தும்;   வினைவலர்   பாங்கினும்  - அடிமையரல்லாக் கம்மியர்
போன்ற  தொழிலாளர்  இடத்தும்; கடிவரையில  அகத்திணை  யொழுக்கங்கடை  நாட்டிச் செய்யுட் செய்தல்
விலக்கில்லை; என்மனார் புலவர் - என்பார் பொருள் நூல் வல்லார்.
  

குறிப்பு:-     ஈரிடத்தும்,  “பாங்கினும்”  எனவரும்  உம்மைகள்  முன்னைச்  சூத்திரங்கள் கூறுந்துணை
மக்களொப்ப   என   இறந்தது   தழீஇயும்,   பின்னர்  ‘ஏவன்  மரபினேனோரும்’ என்பது நோக்கி எதிரது
தழீஇயும் வந்த எச்சவும்மைகளாம்.
  

ஈண்டுப்   புறத்தென்பது,  மேற்சூத்திரங்களில்  கூறப்பட்ட நானில மக்கள் வகுப்புகளின் ஐந்திணைக்குப்
புறத்தேயென  பொருள்  கொண்டு,  பழையவுரைகாரர்  இச்சூத்திரம்  அடியோர் வினைவலர் போன்றவர்க்கு
ஐந்திணை யொழுக்கம் உரித்தன்றெனவும், அவற்றின் புறத்தவான கைக்கிளை பெருந்திணைகளே


5. அடியோர், வினைவலர்