காது. இனி கைக்கிளை, பெருந்திணை போலவே இழிதகவுடைய பொருந்தாக் காமம் என்று இவ்வுரையாளர் கருதுவதால் ஈண்டுக் கூறப்படும் அடியோர் வினைவலராகிய மேன்மக்களல்லாதார் இழிதகவுடைய அப்பொருந்தாக் காமத்திற்கு உரியரென்று இவர்கள் பொருள் கூறுகின்றனர் போலும். தொல்காப்பியர் பெருந்திணையொன்றையே பொருந்தாக் காமமெனக்கூறி, கைக்கிளையைக் குற்றமற்ற ஒருதலைக் காதல் என வேறுபடுத்தி விளக்குகின்றார். ஒரு தலைக் காதல் என வேறு விளக்குகின்றார். ஒரு தலைக் காதல் கைக்கிளை காதலித்தோரைக் காதலிக்கப்பட்டோரும் காதலித்தால், அது ஒத்த காமத்தின் பாலடங்கும். அவ்வாறன்றிக் காதலிக்கப்பட்டோர் பால் காதலின்மை தெளியப்பட்டால், ஆண்டது பெருந்திணையிலடங்கும். அவ்வாறடக்காமல், பொருந்தாக்காமமான பெருந்திணையும் ஒத்த காமமான அன்பினைந்திணையும் வெவ்வேறு கூறி, அவற்றின் வேறுபட்டதாய்க் கைக்கிளை அன்பொத்த இருதலைக் காமம் அன்றாயினும் அன்பற்ற பெருந்திணையுமாகாமல், குற்றமற்ற ஒருதலைக் காமமாய் எல்லோர்பாலும், கடியப்படாத நல்லொழுக்கம் என்பதே தொல்காப்பியர் கருத்தென்பது தெளிவாகும். “பாங்கரும் பாட்டங்காற் கன்றொடு செல்வேம்” என்னும் முல்லைக்கலியும், “என்னோற்றனை கொல்லோ” என்னும் மருதக்கலியும், “அணிமுகமதியேய்ப்ப” என்னும் குறிஞ்சிக்கலியும் அடியோர் வினைவலர் அகத்திணைத்தலைமக்களாதற் குதாரணமாகும். அவை தலைமகளின் அன்புடன்பாடு சுட்டலின், பெருந்திணையும் கைக்கிளையுமாகா; இதுவரு மொத்த அன்புத் திணையேயாம். |
ஒஓகாண், நம்முணகுதற் றொடீஇயர் நம்முண், நாமுசாஅம்; கோனடி தொட்டேன்; - ஆங்காக சாயலின் மார்ப அடங்கினேன், ஏஎ பேயும் பேயுந் துள்ள லுறுமெனக் கோயிலுட் கண்டார் நகாமை வேண்டுவல், கண்டாய் தகடுருவ! வேறாகக் காவின்கீழ் |