போதர கடாரப் புல்லி முயங்குவேம்”
|
(போதரகடாரப் போதரு+அகடார)
|
என வருவதால் தலைமக்கள். தம்முரியராகப் பிறரடியராதல் தெளிக. |
2 இனி வினைவலர் தலைமக்களாதற்குத் செய்யுள்: |
“காராப் பெய்த கடிதொள்வியன் புலத்து”. |
(கலி-109) |
என்னு முல்லைக்கலியில், “இவடான், திருந்தாச் சுமட்டினள், ஏனைத்தோள்வீசி வரிக்கூழை வட்டிதழீஇ, அரிக்குழையாடற் றகையள்” என வருதலால், இதிற்றலை மக்கள் வினைவலராதறிக. இன்னும் “கடிகொளிருங்காப்பில்” (கலி-110) “பாங்கரும் பாட்டங்கால்” (கலி-116) |
“யாரிவன் என்னை விலங்குவான்” (கலி-112) என்னுங் கலிப்பாக்களும் வினைவலர் பாங்கினும் அகஒழுக்கம் கடிவரையின்மை குறிப்பனவாகும். |
“பெருங்கட லுள்கலங்க நுண்வலைவீசி ஒருங்குடன் தன்னைமார் தந்த - கொழுமீன் உணங்கல் புள்ளோப்பும் ஒளியிழை மாதர் அணங்காகு மாற்ற வெமக்கு” |
(ஐந்திணை ஐம்பது-47) |
எனும் மாறன்பொறையனார் வெண்பாவும் வினைவலர் காதலுரிமை குறிப்பதறிக. |
சிவலிங்கனார் |
இச்சூத்திரம் ஐய வினா ஒன்றற்கு விடை கூறுகின்றது. பாடலுட் பயிலும் கிளவித் தலைமக்கள் ஆயர் வேட்டுவர் முதலியவரென்றி அடிமைத் தொழில் செய்பவரும் ஊரவர்க்குப் பொதுவாய் நின்று பொன் இரும்பு முதலிய தொழிலும் ஆடை தோய்த்தல் முதலிய தொழிலும் செய்யும் வினைவலரும் அதன் ஐந்திணைக்கு உரியராவரோ அல்லரோ எனும் ஐய வினாவுக்கு அவரும் ஆவர் என விடை கூறுகிறது. |
“அடிமைத் தொழில் செய்வார் பக்கத்தும் ஊர்க்குப் பொதுவாய் நின்று ஊரவர்க்கு வேண்டிய |